கரோனா 'நெகட்டிவ்' சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெங்களூருக்குள் அனுமதி

பெங்களுரு, மார்ச். 27- பெங்க ளூருவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந் தால் மட்டுமே நகருக்குள் அனுமதி என அரசு அறிவித் துள்ளது.

நாடெங்கும் தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.   இத னால் அனைத்து மாநிலங்க ளிலும் கட்டுப்பாடுகள் கடு மையாக்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள மகாராட் டிர மாநிலத்தில் பல நகரங் களில் பொது முடக்கம் அறி விக்கப்பட்டுள்ளது.

கருநாடக மாநிலத்தில் தற்போது வரை 9,78,478 பேர் பாதிக்கப்பட்டு அதில் 12,471 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,47,781 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 18,207 பேர் சிகிச்சையில் உள் ளனர்.  இதில் பெங்களூரு நகரில் மட்டும் நேற்று 1,623 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 4,22,859 பேர் ஆகி உள்ளது.  தற்போது 12,472 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி கருநாடக மாநில சுகாதார அமைச்சர் சுதாகர், பெங்களூருவில் பல கட்டுப்பாடுகள் விதித்துள் ளார்.  அதன்படி பெங்களூரு வுக்குள் நுழையும் அனைவரும் கரோனா நெகட்டிவ் சான் றிதழ் கட்டாயம் என அவர் அறிவித்துள்ளார்.  வரும் ஏப் ரல் 1 முதல் இந்த விதி அம லுக்கு வர உள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image