தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 30- கரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில், குழந்தை உரி மைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அனுப்பி யுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது கரோனா இரண்டாம் அலை வீசி வருவதால், உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி கள் நடைபெற்று வருவதாலும், தேர் வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாலும், கீழ்க் கண்ட நெறிமுறைகளை ஒவ்வொரு பள்ளியும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும்.

குழந்தைகளை கண்டிப்பாக சமூக இடைவெளி விட்டு அமரவைக்க வேண்டும். அதிகமான எண்ணிக்கை யில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில், அதற்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய் யப்பட வேண்டும்.

அனைத்துக் குழந்தைகளும் கண் டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். அதேபோல் அவர் களின் உடல் வெப்பநிலையையும் பரிசோதிக்க வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பு அறையிலும் கிருமிநாசினி இருக்கவேண்டும். அதன்மூலம் பிள்ளைகள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதை ஆசிரியர் கள் உறுதிசெய்ய வேண்டும்.

பிள்ளைகள் வகுப்பறைக்குள் வரும் போதும், வெளியே செல்லும்போதும் ஒருவரையொருவர் முட்டிமோதிக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

மதிய உணவு நேரத்தில் பிள்ளை கள் தனித்தனியாக அமர்ந்து உணவு உட்கொள்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

வகுப்பறை ஜன்னல் கம்பிகள், கதவுகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள் மற்றும் இடங்களில், தேவைப்படக்கூடிய குறிப்பிட்ட இடைவெளியில் நாள்தோறும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் களுக்கு தெளிவாக தெரியும்வண்ணம் கரோனா குறித்த விழிப்புணர்வு விஷ யங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அவசரகாலத்துக்கான தொலை பேசி எண்கள் அடங்கிய பதாகைகள் அல்லது விவர அட்டைகளை தொங்கவிட வேண்டும்.

ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுவது மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகளை பள் ளிகள் சரியாக பின்பற்றுகின்றனவா என அவ்வப்போது ஆய்வு நடத்தப் படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண் டாவது அலை குறித்து அரசு அதி காரப்பூர்வமாக தெரிவிக்காத நிலை யில், தற்போது தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கரோனா இரண்டாவது அலை வீசி வருவதாக கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

Comments