முதல்வர் தொகுதியில் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கும் அதிகாரிகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொந்தளிப்பு

சேலம், மார்ச் 30- சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் அஞ்சல் ஓட்டு வழங்கப்பட்டுள் ளது. முதலில், அரசு ஊழி யர்களுக்கான அஞ்சல் ஓட்டு வழங்கப்பட்டு, அதனை பெறும் பணியில் தேர்தல் அலுவலர் கள் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதி வாரியாக தேர் தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 கட்ட பயிற்சி வகுப்பு நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின்போது, சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் ஓட்டு சீட்டுகள் வழங்கப் பட்டு, தொகுதி வாரியாக தனித்தனி பெட்டிகளில் பெறப்பட்டது. சில அரசு ஊழியர்கள், தங்களின் அஞ்சல் ஓட்டுகளை அஞ்சலில் அனுப்பி வைப்பதாக கூறி எடுத்துச் சென்றனர். பெரும் பாலானோர், அங்கேயே தங்களின் அஞ்சல் வாக்கை பதிவு செய்து, பெட்டிகளில் போட்டனர். முதல்வர் எடப் பாடி பழனிசாமி போட்டி யிடும் இடைப்பாடி தொகுதி யிலும், அதன் அருகே சங்க கிரி தொகுதியிலும் அஞ்சல் ஓட்டு போடும் அரசு ஊழியர் களிடம் அந்தந்த துறையின் உயர் அதிகாரிகள் தனித்தனி கூட்டங்களை நடத்தியுள்ள னர். அந்த கூட்டத்தில், அதி முகவிற்கு வாக்களியுங்கள் என நிர்ப்பந்தித்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளி யாகியுள்ளது.

இதுபற்றி அரசு ஊழியர் கள் கூறுகையில், ‘‘எங்களது விருப்பம் போல், அஞ்சல் வாக்கை பதிவு செய்வோம். ஆனால், இடைப்பாடி, சங்க கிரி தொகுதிகளில் அதிமுக வுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் பணி யில் ஈடுபடும் உயர் அதிகாரி கள் நிர்ப்பந்திக்கிறார்கள். ஒவ்வொரு துறையின் உயர் அதிகாரியும் இதனை கூறுவ தால், அதிர்ச்சியடைந்துள் ளோம். அதேபோல், அஞ்சல் வாக்களிக்க தாமதிக்க வேண் டாம். உடனே அதிமுகவிற்கு வாக்களித்து அனுப்புங்கள் எனக்கூறுகின்றனர். சிலர், உங்களுக்கு தேவையானது வந்து சேரும் எனக்கூறியும் நிர்பந்திக்கிறார்கள். இத்த கைய நபர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இச்சம்பவம் சேலத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image