தமிழகம் விடியலைப் பெற - ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தி.மு.க. ஆட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களியுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 26, 2021

தமிழகம் விடியலைப் பெற - ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தி.மு.க. ஆட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களியுங்கள்!

குன்னூர் - கோபி தொகுதிகளில் தமிழர் தலைவர் பரப்புரை


குன்னூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கா.இராமச்சந்திரனை ஆதரித்து குன்னூரில் தமிழர் தலைவர் தேர்தல் பிரச்சார உரையாற்றினார்

குன்னூர், மார்ச் 26 தமிழகம் விடியலைப் பெற வேண்டும் என்றால் ஆட்சி மாற்றத்தை ஏற் படுத்த, தி.மு.. ஆட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மதச் சார்பற்ற முற் போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் குன்னூர் மற்றும் நம்பியூரில் நேற்று (25.3.2021) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்களில் உரையாற்றினார்.

குன்னூர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் குன்னூர் தொகுதி தி.மு..வேட்பாளர் கா.இராமச்சந்திரனை ஆதரித்து நேற்று குன்னூர் பெரியார் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட செய லாளர் மு.நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மு.வேணுகோபால் வரவேற்புரை யாற்றினார்.

பெரியார் மருத்துவ குழும இயக்குநர் இரா.கவுதமன், மாவட்ட அமைப்பாளர் இரா.இரவி, பொதுக்குழு உறுப்பினர் இராவணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நம்பியூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கோபி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி.மணிமாறன் பயனாடை அணிவித்து வரவேற்றார். (25.3.2021)

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசியபின் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில்,

குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடத்தி கடும் வெயிலிலும் கூடியிருக்கிறீர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் .இராசா அவர்களை வெற்றிபெற வைத்து ஒரு சாதனை படைத்தீர்கள். இங்கே வெற்றிடம் வெற்றிடம்  என்று சொன்னதை பொய்யாக்கி திராவிடர் இயக்கம் அனைவருக்கும் தன்னிடம் என்பதுதான் உண்மை  என்னுமளவுக்கு பா... படுதோல்வி அடைந்தது என்ற செய்தி வந்தது.  நெருப்பு பற்றிக் கொண்டால் அதை அணைப்பதற்கு எப்படி துடிப்போமோ அதுபோல இப்போது நமது உரிமை களை மீட்கத் துடிக்கிறோம்.

ஊழல், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அடக்கு முறை என்று தொடர்ந்து நம் மீது திணிக்கப்பட்டது. இரண்டு கூட்டணிகளை தவிர மற்ற அனைவரும் ஒரே டிராமா கம்பெனி தான். ஒரே முதலாளிதான். பிராண்ட் தான் வேறு.எனவே இவர்களை நம்பி வாக்களித்தால் அது செல்லாத வாக்குகளுக்கு சமம். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டமன் றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பினோமே அதற்கு என்ன நடவடிக்கையை மாநில அரசு எடுத்தது? நீலகிரி மாவட்டம் அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு என்ன பிச்சையா போடுகிறீர்கள் என்று இப்போது உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது? எனவே தமிழகம் விடியலைப் பெற வேண்டும் என்றால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தி.மு..ஆட்சி அமைக்க கா.இராமச்சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

கோபி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி.மணிமாறனை ஆதரித்து குன்னூரில் தமிழர் தலைவர் தேர்தல் பிரச்சார உரையாற்றினார்.

தி.மு..மாவட்ட செயலாளர் முபாரக், குன்னூர் நகர தி.மு..செயலாளர் இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, சி.பி.அய்.மாநிலக்குழு உறுப்பினர் வெள்ளி, மாநில சிறுபான்மை அணி துணைத்தலைவர் அன்வர்கான், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், மருத்துவர் புகழேந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் சத்யநாதன் நன்றி கூறினார்.

நம்பியூர்

பா..., - .தி.மு..வால்

பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கோபி செட்டிப்பாளையம் தொகுதி தி.மு..வேட்பாளர் வெ.மணிமாறன் அவர்களை ஆதரித்து நம்பியூர் பெரியார் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.

வழக்குரைஞரணி பொறுப்பாளர் மு.சென்னியப்பன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் சீனிவாசன், மண்டல தலைவர் பிரகலாதன், மண்டல செயலாளர் ராஜமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் யோகாசனங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது

சீரிய பகுத்தறிவாளர், சிறந்த சுயமரியாதை இயக்க குடும்பத்தில் இருந்து வரும் வெ.மணிமாறன் அவர்களை ஆதரித்து வாக்குகள் கேட்டு இங்கு வந்திருக்கிறோம்.

தொண்டு செய்வதற்காகவே இருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தவர். பா... - .தி.மு.ககூட்டணி வெற்றி பெறும் என்று யாரும் நம்பவில்லை.ஏனென்றால் இவர்களால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. கரோனாவுக்கு இரண்டு முறை தடுப்பூசி போடவேண்டும் அல்லவா? அதேபோல் 2019இல் தளபதி ஸ்டாலின் அவர்கள் முதல் தடுப்பூசியை போட்டார். இப்போது இரண்டாவது முறையாக ஒரு தடுப்பூசியை தளபதி ஸ்டாலின் தலைமையில் போடப்போகிறோம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தி.மு..தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் .தி.மு..தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு தொடர்பாக ஒரே ஒரு வரியாவது இடம்பெற்றுள்ளதா என்றால் இல்லை. எனவே தி.மு..ஆட்சியமைக்க வேண்டும்.

அண்ணா ஒருமுறை சொன்னார். எனது தொண்டர்கள் கையில் காசில்லாதவர்கள், ஆனால் நெஞ்சில் மாசில்லாத வர்கள் என்று! அப்படிப்பட்ட சிறந்த செயல்வீரர் வெ.மணிமாறன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

பரப்புரை கூட்டத்தில் மாவட்ட தி.மு..செயலாளர் நல்லசிவம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன்,

தி.மு‌..ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சரவணன், .தி.மு..மாவட்ட பொறுப்பாளர் கந்தசாமி, சி.பி.எம்.மாவட்டக் குழு முத்துச்சாமி, வி.சி..மாவட்ட பொறுப்பாளர் அம்பேத்கர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, சி.பி.அய்.மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், காங்கிரஸ் வட்டார தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய தி.மு.. பொறுப்பாளர் சண்முகம், ஒன்றிய  கழக செயலாளர் அரங்கசாமி, கொ.மு.தே..மாவட்ட செயலாளர் சிவராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட கூட்டங்களில், திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக் கழக தலைவர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, மாநில அமைப்புச் செயலாளர்கள் மதுரை செல்வம்  ,ஊமை ஜெயராமன் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment