கேள்விக்கு என்ன பதில்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 26, 2021

கேள்விக்கு என்ன பதில்?

'நீட்' 'நீட்' என்று வெகு மக்களால் பேசப்படுகிறது அல்லவா - அதன் கந்தா யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமை.

இந்நாட்டின் பெரும் பான்மையான மக்கள் நீண்ட ஆயிரம்  ஆண்டு காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள். பஞ்சமர்கள், சூத்திரர்கள் படிக் கக் கூடாது என்பது வேத சாஸ்திரங்களின் கட்டளை.

அதனைத் தலை கீழாகப் புரட்டியடித்தது நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் - திராவிடர் இயக் கம் - இவற்றின் ஆணி வேர் தந்தை பெரியார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியால் வளர்ந்து வரு வதைச் சகிக்க மாட்டாத - பொறுக்க மாட்டாத ஆதிக்க புரியினர் கொண்டு வந்த கண்ணி வெடிதான் 'நீட்'

இந்த 'நீட்' தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் என்ன தெரி யுமா?

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 'நீட்' மதிப் பெண்ணுடன் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை யும் சேர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு ஒன்று தொட ரப்பட்டது.

வழக்கு விசாரணையில் (13.1.2017 வெளிவந்த செய்தி) நீதிபதிகள் சி.பி. எஸ்.. நிர்வாகத்தினரைப் பார்த்து அறிவார்ந்த - ஆணித்தரமான அய்ந்து கேள்விகளை நறுக்குத் தெறித்ததுபோல கேட் டனர்.

1) இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டம் இல்லாத நிலையில் 'நீட்' தேர்வை எதிர் கொள்வது எப்படி?

2) 12ஆம் வகுப்புத் தேர்வு முடிந்தவுடன் 'நீட்' தேர்வு நடத்தாததற்குக் காரணம் என்ன?

3) சி.பி.எஸ்.. பாடத் திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட் டதன் காரணம் என்ன?

4) கல்வித் தரம் மாநிலத் திற்கு மாநிலம் வேறு பாட்டுடன் இருக்கும் நிலையில் 'நீட்' தேர்வை மாணவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்?

5) கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் கல்வித் தரம் வேறுபடும்போது அனைவரும் சிபிஎஸ்இ தேர்வை எப்படி எதிர் கொள்ள முடியும்?

6) மாநில மொழிகளில் உள்ள வினாத் தாள் களுக்கும்,  இந்தி, ஆங்கில மொழிகளில் உள்ள வினாத்தாளுக்கும் வேறு பாடு எப்படி வந்தது?

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்  எழுப்பிய வினாக்களுக்கு இன்று வரை பதில் இல்லை - ஆனால் 'நீட்' மட்டும் நடைமுறைக்கு வந்தது எப்படி? சிந்திப்பீர்!

- மயிலாடன்

No comments:

Post a Comment