நீரிழிவு நோய்த் தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகனின் ‘உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது' புத்தகம் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

நீரிழிவு நோய்த் தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகனின் ‘உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது' புத்தகம் வெளியீடு

சென்னை, மார்ச் 3- அர்ப்பணிப்பு மற்றும் தளர்ச்சியிலிருந்து மீண்டெழும் திறன் ஆகிய பண்புகள், எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்களுக்கு எடுத்து கூறுவதே நோக்கமாக கொண்டஉயர் மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது' என்ற நூலை நீரிழிவு நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகன் அவர்கள் எழுதியுள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழா நேற்று (2.3.2021) மாலை டாக்டர் மோகன் நீரி ழிவு சிறப்பு சிகிச்சை மய்யத்தில் நடை பெற்றது. மெட்ராஸ் .என்.டி. ரிசர்ச் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், இதய--நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.பி.நரேஷ்குமார், கண் மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜீவ் ராமன், திரைப்பட ஒளிப்பட இயக்குநர் ராஜீவ் மேனன், டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனர் தலைவர் வேணு சிறீனிவாசன் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த் துரை வழங்கினர். டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மய்யத்தின் நிர் வாக இயக்குநர் ஆர்.எம்.அஞ்சனா இந்நூல் குறித்து அறிமுகவுரையாற்றினார்.

No comments:

Post a Comment