சமூகநீதி - ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து தமிழர் தலைவரின் இரு அறிக்கைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 21, 2021

சமூகநீதி - ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து தமிழர் தலைவரின் இரு அறிக்கைகள்

 அய்.நா.வில் வரும் ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான கண்டனத் தீர்மானத்தின்மீது இலங்கைக்கு ஆதரவாக மத்திய பா... அரசு செயல்படுவதா?

ஈழத்தில் இறுதி கட்ட அரசப் பயங்கரவாதப் போரில் ஈவு  இரக்கம் சிறிதுமின்றி ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் இனப் படுகொலை  (Genocide) செய்யப்பட்டனர்  என்பது உலகறிந்த உண்மை.

இதனைக் கண்டிக்கும் வகையில்  நாளை (22.3.2021) அய்.நா.வின் மனித உரிமை ஆணை யத்தில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின்மீது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட இருக்கிறது என்ற செய்திஅதிர்ச்சியை அளிக்கிறது.

பா.... ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் என்று நம்பியவர்களை நினைத்தால் நமக்குப் பரிதாபமும் - வேதனையும்தான் மிஞ்சுகிறது.

உலகெங்கும் உள்ள மனித உரிமையாளர்கள், மனிதநேயர்கள், உலகெங்கும் வாழும் பல கோடி தமிழர்களின், குறிப்பாக தமிழ் நாட்டில் வாழும்  தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் கண்டனத் துக்கும், வெறுப்புக்கும், எதிர்ப்புக்கும் இந்திய அரசு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

மறுபரிசீலனை செய்யட்டும் இந்திய அரசு!

இந்திய அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்து மனிதப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத் துகிறோம்.

இல்லையெனில் அதன் பார தூர விளைவுகளை இந்திய அரசு ஏற்கும் நிலை உலகளவில் ஏற்படும் என்றும் சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும்.

ஏழு பேர் விடுதலையில்கூட உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியும், மாநில அரசு பரிந்துரை செய்தும், ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தப்பட்ட இந்த விட யத்தில் காங்கிரஸ்கூட மறுப்பு சொல்லாத போதும் மத்திய பா... அரசு எதிர்நிலை எடுத்து  அவர்களை விடுதலை செய்ய இன்னமும் மறுக்கிறது. அதைத் தட்டிக் கேட்க தமிழக .தி.மு.. அரசுக்கும் தெம்பில்லை.

குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழர் விரோத நடவடிக்கை என்றால் அதில் மத்திய பா... அரசு மார்தட்டி முன் வரிசையில் நிற்கும் என்பதைத் தமிழர்கள்  இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் ...தி.மு.. அரசின் நிலைப்பாடு என்ன? பா...வை விழுந்து விழுந்து ஆதரிக்கும் கட்சிகளின் நிலைப்பாடு என்னநாடே எதிர்பார்க்கிறது!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

               

No comments:

Post a Comment