பழைய காசோலைகள் ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகும் செல்லுபடியாகும்

 புதுடில்லி, மார்ச் 31- 2020 ஏப்ரலில், பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியன்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கிகள் இணைக்கப்பட்டன.

கனரா வங்கியுடன், சிண் டிகேட் வங்கி இணைக்கப் பட்டது. இந்தியன் வங்கி யுடன், அலகாபாத் வங்கி. யூனியன் பேங்க் ஆப் இந்தியா வுடன், ஆந்திரா வங்கி, கார்ப் பரேஷன் வங்கி ஆகியவை இணைக்கப்பட்டன.

புதிய வங்கியிலும், பழைய கணக்கு எண்களையே வாடிக் கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இணைக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்பட்ட காசோலை கள், ஏப்., 1 முதல் செல்லாது என, தகவல்கள் பரவி வரு கின்றன.

இது குறித்து, வங்கி அதி காரிகள் கூறும்போது, “வங் கிகள் இணைக்கப்பட்டதும், முதலில் மென்பொருள் இணைக் கும் பணி நடந்தது. பணிகள் முழுமையாக முடிந்தாலும், சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.வங்கியின், 'தி இந்தி யன் பைனான்சியஸ் சிஸ்டம் கோடு' எனப்படும், .எப்.எஸ்.சி., கோடு; 'மேக்னடிக் இங்க் ரெகக்னிஷன் டெக்னா லஜி' எனும், எம்..சி.ஆர்., கோடு ஆகியவை மாற்றப் பட்டுள்ளன.

ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் பும், பழைய காசோலைகள் செல்லும். பழைய காசோலை பயன்பாடு, உடனடியாக நிறுத்தப்படாது, அதற்கு அவகாசம் வழங்கப்படும்.

Comments