ரயில்களில் இரவு நேரத்தில் மின்னணு சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது

புதுடில்லி, மார்ச் 31 இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரயில்களில் கைப் பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது.

கடந்த 2014ஆம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ரயில் பெட்டி களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கைப்பேசி சார்ஜிங் பாயிண்டு கள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்று ரயில் பாது காப்பு ஆணையர் பரிந்துரைத் தார். மின்கசிவு அபாயத்தைத் தவிர்க்க அவர் இவ்வாறு அறி வுறுத்தினார்.

இந்நிலையில், பாதுகாப்பு ஆணையரின் அந்த பரிந்து ரையை தீவிரமாக அமல் படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த 16ஆம் தேதி முதல் இதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்ட மேற்கு ரயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட நேரத் தில் சார்ஜிங் பாயிண்டுகளுக் கான மின் துணைப்பை துண் டித்து விடுகிறது. ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின் படி தாங்கள் இதை அமல் படுத்தி வருவதாக மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக ஏற்கெனவே உள்ள அறிவுறுத் தல் தற்போது வலியுறுத்தப்ப டுவதாகவும், அது நடை முறைப்படுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வேயும் அறிவித்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட, இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரயில்களில் கைப்பேசி உள்ளிட்ட மின் னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது. ரயில்களில் தீ விபத்துகளை தவிர்க்க வேறு பல நடவடிக்கைகளை யும் மேற்கொண்டுள்ள ரயில்வே, அதுகுறித்து பயணி கள் உள்ளிட்டோருக்கு 7 நாட்களுக்கு தீவிர விழிப் புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டல ரயில்வே நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Comments