18 மாநிலங்களில் இரட்டை உருமாறிய கரோனா தேவைக்கு ஏற்ப பொது முடக்கத்திற்கு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 29, 2021

18 மாநிலங்களில் இரட்டை உருமாறிய கரோனா தேவைக்கு ஏற்ப பொது முடக்கத்திற்கு அனுமதி

மும்பை, மார்ச். 29  இந்தியாவில் இரட்டை உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தேவையான பகுதி களில் ஊரடங்கை அறிவிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு  இறுதியில் கண்டறியப் பட்ட கரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு 13 கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு மற்றும் கரோனா தடுப்பூசி கார ணமாக வெகுவாக கட்டுப்படுத்தப் பட்டது.  ஆனால் கடந்த இரு மாதங்களாக இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இதனால் தற்போது மீண்டும் கரோனா தடுப்பு நடவடிக் கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தி யாவில் தற்போது 18 மாநிலங்களில் இரட்டை உரு மாறிய கரோனா தொற்று கண் டறியப்பட்டுள்ளது.  இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே கண்ட றியப்பட்டு வந்த இந்த மாறுபட்ட கரோனா தொற்று பாதிப்பு தற் போது இந்தியாவிலும் கண்டறியப் பட்டுள்ளது கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்தி யாவில் இந்த இரட்டை உருமாறிய கரோனா தொற்று கண்டறியப் பட்டாலும்,  இந்த தொற்று விரை வாக அதிகரிக்குமா என்பது குறித்து விளக்க போதுமான எண்ணிக் கையில் கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பாக 'ஜெனோமிக் சீக்வென்சிங்' மற்றும் தொற்றுநோயியல் ஆய்வகம் தொடர்ந்து நிலைமையை ஆராய்ந்து வருகின்றது" என்றும் சுகாதாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உருமாறிய இரட்டை கரோனா தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து மாநி லங்கள் / யூனியன் பிரதேசங்களில், 10787 நேர்மறை மாதிரிகள் பரி சோதனை செய்ததில், 771 மாறு பாடுகள் (VOC) கண்டறியப்பட்டுள் ளன. இதில் இங்கிலாந்தில் 736 மாதிரிகளுக்கும், தென்னாப்பிரிக்க வைரசுகளுக்கு 34 மாதிரிகளுக்கும், பிரேசிலிய 1 மாதிரி இணையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ்தொற்று மாதிரிகள் நாட்டின் 18 மாநிலங்களில் அடை யாளம் காணப்பட்டுள்ள தாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில்  புதிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 275 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள் ளது. மேலும் இந்த இறப்பு எண்ணிக்கை 132 நாட்களின் பின் அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில்  14ஆவது நாளாக அதிகரித்துள்ள நிலை யில், மொத்த பலி எண்ணிக்கை 3.6 லட்சமாக பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் பல மாநி லங்களில் கரோனா தொற்று பாதிப்பு இரண்டாவது அலை வீசி வரும் நிலையில், பாதிக்கப் பட்ட மாநிலங்களின் அரசாங் கங்கள் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

மேலும் ஏற்கெனவே சில மாநிலங்களில், கரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்த ரவுகளை அறிவித்துள்ள நிலை யில், தற்போது கரோனா தொற்றை குறைக்கும் வகையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க பஞ்சாப் மற்றும் மகாராட்டிரா போன்ற மாநிலங்கள் பரிசீலித்து வருகின்றன. கரோனா ஊரடங்கு கடந்த ஆண்டு மார்ச் 23இல் முதலில் அறிவிக்கப் பட்டது. சுமார் 525 கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டபோது இந்தியா கடுமையான ஊரடங்கை அறிவித்தது. ஆனால் கரோனா தொற்று அதிவேகமாக பரவி 2020 மார்ச் 15 அன்று 100ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 2020 மார்ச் 29 அன்று 1,000த்தைக்  கடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment