இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.அய்.(எம்) தேர்தல் அறிக்கை

சி.பி.அய். தேர்தல் அறிக்கையில்...

தொழில் வளர்ச்சி

தொழிற்சாலைகள் தொழிலாளர் எண்ணிக் கையில் முதலிடம் பெற்று, சிறந்த உற்பத்தி மாநிலமாக இருந்த தமிழ்நாடு அஇஅதிமுக ஆட்சியில் முதல் 10 இடங்களிலிருந்து இறங்கி விட்டது.

உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி பல்லாயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் எந்த ஆலையும் உற்பத்தியைத் துவக்கவில்லை.

மீண்டும் தமிழகத்தை முதன்மை நிலைக் கும் கொண்டு வருவதற்கான தொழிற் கொள்கை வகுக்கப்படும். இறக்குமதி செய் யப்படும். உற்பத்தி இயந்திரங்களை கோவை யிலேயே உருவாக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வது ஊக்குவிக்கப்படும்.

வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பணிகளில் - தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கும் வகையில் விதிகள் மீண்டும் திருத்தப்படும். தமிழகத்துள் வரும் மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 80% பணிநியமனம் வழங்க வலியுறுத்தப்படும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், நகரத்துக்கும் விரிவுபடுத்தப்படும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி, கண் ணியமான வாழ்வுக்குரிய ஊதியம் வழங்கப் படும். இத்திட்டத்தில் முறைகேடுகள் களையப் பட்டு, வேலைகள் சரிவர நடப்பது உறுதி செய்யப்படும்.

கடலோர பிரச்சினைகள்

அனுமின் நிலையங்கள், அனல்மின் நிலையம், பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகைள், மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய, தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரும் துறைமுகங்கள் என கடற்கரை எங்கும் தொழிற் வளர்ச்சிக்கான கட்டுமானப்பணிகள் நிறைந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை இத்தகைய வளர்ச்சியின் ஒட்டு மொத்த பாதிப்புகளை கண்டறிய ஒருங் கிணைந்த சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை இதுவரை ஆளும் அரசுகள் வெளியிடவில்லை. இவ்வறிக்கையை வெளி யிட்டு பாதிப்பின் அளவுகளை  கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துவோம்.

சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கடற் கரையோரங்களில் பெருகிவரும் ஹோட் டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் அதிகரித்து வருவதை முறைப்படுத்திட வற்புறுத்துவோம்.

பெரும் தொழில் நிறுவனங்களின் வேட்டைக்காடாக கடற்கரை மண்டலம் மாறியுள்ளதால் அந்நிலத்தில் இருந்து மக்கள் அந்நியப்படுவதும் அதிகரித்துள்ளன. எனவே மக்கள் பொதுவிசாரனையில் அனுமதி இல் லாத எந்த புதிய நிறுவனமும் அனுமதிக்கப் படாமலிருப்பதை வற்புறுத்துவோம்.

கடலோர விவசாய நிலங்களில் தொழிற் சாலைகள் வருவதால் அந்நிலங்களை  நம்பி இருந்த விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள், பெண்கள் ஆகியோர் உதிரி தொழி லாளர்களாக புலம்பெயரும் அவலம் நடந்து வருகிறது. அத்தொழிற்சாலைகளில் - இவர் களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்க பாடுபடுவோம்.

 

சி.பி.எம். தேர்தல் அறிக்கையில்...

 வேலைவாய்ப்பு

அனைத்து அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பிட குரலெ ழுப்புவோம். அதற்கு முன்னோட்டமாக காலிப்பணியிடங்கள் பற்றிய புள்ளி விவ ரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட வற்புறுத்துவோம்.

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அமைப்புகளில் நேர்மையாகவும், இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் பணியிடங்கள் நிரப்பப்படுவதையும் வலியுறுத்துவோம். .அமர்த்தப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வற்புறுத்துவோம். நிரந்தர தன்மை கொண்ட பணியிடங்களில் ஒப்பந்தம் மற்றும் மதிப் பூதியம், தொகுப்பூதியம் முறை முற்றாக ஒழித்து நிரந்தர பணியிடமாக மாற்றிட வலியுறுத்துவோம்.

அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளிலும் ஊழல், மற்றும் பரிந்துரைகள் அற்ற தகுதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப் படையில் முறையான மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் வேலை நியமனங்கள் நடை பெற நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்.

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.5,000/- வழங்கிட பாடுபடுவோம்.

தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட திருத்தம் கொண்டுவர வலியுறுத்துவோம்.

புதிய நவீன சூழலுக்கு ஏற்றார்போல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க வல்லுனர்கள் குழு அமைத்து திட்டங்கள் தீட்டப்படவும், அரசின் மூலதனத்தில் புதிய நவீன தொழிற் சாலைகள் உருவாக்கி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வற்புறுத்துவோம்.

உள்ளூர் வளங்கள் சார்ந்த தொழிற் சாலைகள் உருவாக்கவும், அதற்கான பயிற் சியும் இளைஞர்களுக்கு அளிப்பதற்கும், இதன் மூலம் உள்ளூர் சார்ந்த புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவும் வலியுறுத்துவோம்.

வேலை செய்யும் பெண்களுக்கான அரசு விடுதிகள் எல்லா மாவட்டங்களிலும் - முறையாக செயல்பட நடவடிக்கை எடுத் திடவும், பெண் தொழில்முனைவோர் - ஊக்கு விக்கப்படவும், அதற்கான நிதி, மாற்று திறன் வளர்ப்பு பயிற்சி சிறப்பு கவனத்துடன் செயல் முறைப்படுத்த வற்புறுத்துவோம்.

சமூக சீர்திருத்தத் துறை

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அளவில் சமூக சீர்திருத்தத் துறை அமைக்கவும், அறிவியல் அடிப்படையிலான பகுத்தறிவு கண்ணோட்டத்தை இத்துறை மூலம் வளர்த் தெடுக்க மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image