ஓராண்டு இடைவெளிக்குப்பின் திருச்சி, சேலம், கோவை மாவட்டங்களில் தமிழர் தலைவர் - தோழர்கள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 5, 2021

ஓராண்டு இடைவெளிக்குப்பின் திருச்சி, சேலம், கோவை மாவட்டங்களில் தமிழர் தலைவர் - தோழர்கள் சந்திப்பு

தி.மு.. மாநில மாநாட்டுப் பந்தல் - மேனாள் அமைச்சர் நேரு அவர்களுடன் பார்வையிட்டு மகிழ்ச்சி

விரைவில் (பரோல் முடிந்து) சுதந்திரமாகப்

பறக்கும் நாளை மகிழ்வுடன் எதிர்பார்க்கிறேன் 

தமிழர் தலைவரின் உற்சாகம் பெற்ற - பயணம்பற்றி அறிக்கை

கரோனா சூழலில் ஓராண்டுக்குப் பிறகு திருச்சி, சேலம், கோவை மாவட்டங்களுக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், கழகத் தோழர்களைச் சந்தித்தும், நடைபெறும் கட்டடப் பணிகளைப் பார்வையிட்டும் மகிழ்ந்த நிலையில் அந்தப் பயணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கடந்த ஓராண்டு கழிந்த நிலையில் திருச்சி கல்வி வளாகத்திற்குச் சென்று, பெரியார் மாளிகையில் வழமை போல் தங்கி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்து நம் இளந்தளிர்களையும், அதன் காப்பாளர்களையும், நமது பெரியார் நூற்றாண்டு  கல்வி வளாகத்தில் சிறப்பாக இயங்கி வரும் பெரியார் மணியம்மை மேல் நிலைப் பள்ளி, பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பெரியார் மருந்தியல் கல்லூரி, சாமி கைவல்யம் இல்லம் என்ற முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள "பெரிய குழந்தைகளான" முதியோர்களான நம் கழக உறவுகள் ஆகியோரைச் சந்திப்பது  என்ற நிலையில், ஆசிரியப் பெரு மக்கள், பணித் தோழமையாளர்கள், மாளிகையை எப்போதும் காத்துவரும் மாவட்டக் கழகத் தலைவர் செயல் வீரர் ஆரோக்கியராஜ், லால்குடி மாவட்ட செயலாளர் ஆல்பர்ட், கழக மாவட்டப் பொறுப்பாளர்களில் ஒரு சிலர் நான் வருவதை எப்படியோ "மோப்பம்" பிடித்து, 2.2.2021 காலை 11.30 மணியளவில் வரவேற்று உணர்ச்சி வயப்பட்டனர்.

ஓராண்டு இடைவெளிக்குப் பின் பயனுள்ள பயணம்!

பெரியார் மாளிகையை நிர்வாகித்து வரும் தங்கை தங்காத்தாள் 'எப்பண்ணே திருச்சிக்கு வருவீர்கள்" என்ற கேள்வியை தொலைபேசிமூலம் கேட்டுத் துளைத்துக் கொண்ட இருக்கும்.

எனக்கு ஒரு வகையான மன அழுத்தம். மாதம் ஒரு முறையாவது எனது பயணத் திட்டத்தில் வந்து போகும் திருச்சி பெரியார் மாளிகை கல்வி வளாகம்,  குழந்தைகள், முதியோர் இல்லம் வராத ஏக்கம் என்னை வருத்திக் கொண்டேதான் இருந்தது!

கட்டுப்பாடுகள், முகக்கவசம், சோப் போட்டு அடிக்கடி கழுவுதல், தனி நபர் இடைவெளி, அதிக நேரம் எவரிடமும் பேசாமல் சந்திப்பில் மகிழ்தல் என்ற வரைமுறையோடு,  மதியம் நல்ல ஓய்வெடுத்து பின் மாலையில் நமது அறக்கட்டளை கட்டட மேற்பார்வை பொறுப் பாளர் அருமைத் தோழர் பேராசிரியர்

. சுப்ரமணியன் அவர்கள் என்னை வளாகத்திற்கு மாலை 4.30 மணியளவில் அழைத்துச் சென்றார்.

மிசாவிலிருந்து வெளியான பிறகு, மற்ற வெளி வெளிச்சத்தைப் பார்த்ததுபோல, சுயக்கட்டுப்பாடு, மருத்துவர்களின் அறிவுறுத்தல், நமது குருதி - கொள்கை உறவுகளின் மீற முடியாத அன்புக் கட்டளை ஆகியவைகளால் கட்டுண்ட நிலையில், ஒருவகை "பரோல்" போல திருச்சி சென்று சில மணித் துளிகளில் அனைவரையும் பார்த்து, அளவளாவி மகிழ்ச்சியுடன் திரும்பி விட்டேன்.

3ஆம் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாநகரில் நடைபெறும் பெரியார் மன்ற திருமண மண்டபப் பணிகள் - பொறியாளர் நம்பிக்கைக்குரிய திரு. சிற்றரசு மேற்பார்வையில் நடைபெறும் பணிகள் நல்ல வண்ணம் துவக்கப்பட்டு கம்பிகள் கட்டப்பட்டு எழுந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம் (திருச்சியிலிருந்துவேன்மூலம் பயணம்).

சேலத்தில் தோழர்கள் சந்திப்பு

கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பழனி புள்ளையண்ணன், மாநகரத் தலைவர் அய்யா ஜவகர், கவிஞர் சிந்தாமணியூர் சுப்ரமணியம், மாநகரச் செயலாளர் . இளவழகன், கழக இளைஞரணியின் தமிழர் தலைவர், பரமசிவம், பொறியாளர் மு. செல்வராஜ், சுஜாதா தமிழ்ச்செல்வன், ஆர்.ராசு, அரங்க. இளவரசன், கா. வைரம், . கிருஷ்ணமூர்த்தி, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மொட்டையன் மற்றும் தோழர்கள்  அன்புடன் வரவேற்று  மகிழ்ந்தனர்.

கோவை சந்திப்புகளும் -

கண் மருத்துவ சோதனையும்

பிறகு தோழர் இளவழகன் இல்லத்து உணவை (விருந்தை) வேனில் எடுத்துக் கொண்டு கோவைக்குப் பயணமானோம் - அம்மாவும்,  பேராசிரியர் சுப்பிரமணியமும் உடன் வந்தனர். வழக்கமான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் சத்தியன் என்ற கண் மருத்துவ மேதையின் அன்பும், பண்பும், உயர்ந்த சிகிச்சை அனுபவமும் பெற்று (பல ஆண்டுகளாக எங்கள் இருவருக்கும் கண் மருத்துவர் அவர்) அவரிடம் பரிசோதித்துக் கொண்டு 13 மாதங்கள் ஆன நிலையில், (அவரை நமது பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் குன்னூர் டாக்டர் இரா. கவுதமன் அவர்கள்தான் முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர்) அவரும் கோவை  வந்திருந்தார்.

கழக முக்கிய தோழர்கள் - மாவட்டக் கழகத் தலைவர் .சந்திரசேகரன் (விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஊன்றுகோல் உதவி மூலம் நடக்கும்) - அவரும் மருத்துவமனை வளாகம் வந்திருந்தார். சந்தித்து நலம் விசாரித்து விட்டு உடனடியாக அனுப்பிவிட்டோம்.  மண்டல செயலாளர் . சிற்றரசு, மாவட்ட செயலாளர் திக செந்தில்நாதன்,  மண்டல மகளிர் அணி செயலாளர்   கலைச்செல்வி,  புளியகுளம் வீரமணி, பறைஇசையில் வரலாறு படைக்கும் நம் இருபால் இளைஞர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சிலரும் மருத்துவமனை வளாகத்தில் (வெளியே காத்திருந்த நிலையில்) பரிசோதனை, முடிந்தவுடன் வந்து பார்த்து சில மணித்துளிகள்  பேசி மகிழ்ந்து, உடனடியாக மாலை 6 மணியளவில் புறப்பட்டு திருச்சிக்கு சாலை வழியாக பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் கரூர் தோழர் கார்த்திகேயன் தனது இல்லத்திலிருந்து எங்களுக்கு இரவு உணவு தயாரித்துக் கொண்டு வந்து தந்து நலம்விசாரித்துச் சென்றார். கரூர் மாவட்ட செயலாளர்  காளிமுத்து, கரூர்  நகரத் தலைவர் அன்பு,   செல்லத்துரை, செகந்நாதன், சதாசிவம் மற்றும் தோழர்கள் வழியில் சில மணித்துளிகள் சந்தித்து விடை பெற்றனர். இரவு 11 மணிக்கு பெரியார் மாளிகை வந்து சேர்ந்து உறங்கினோம். அனைவரது 'பாட்ரியும்' ரீசார்ஜ் ஆகியது!

சிறுகனூரில் பெரியார் உலகப் பணிகள்திமுக மாநாட்டுப் பந்தல் ஏற்பாடு - பார்வை

4.2.2021 காலை சிறுகனூரில் உள்ள நமது பெரியார் உலகம் பணிகள் - சாலை அமைப்பு,  புதிய குளம் வெட்டி ஊற்று அமைத்தல் போன்ற பணிகளை என்னிடம்கூட சொல்லாமலே தொடர் பணியாக கரோனாவிலும் தடை பெறாது நடந்த நிலை. (2 கோப்புகள்தான் தமிழக அரசிடம் இறுதி கட்டத்தில் 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உறங்கிக் கொண்டிருக்கும் நிலை இருந்தபோதிலும்)  இந்த நிலை நடைமுறையில் துவங்கி நடப்பது எனக்கே வியப்பளித்தது! கழகப் பொதுச் செயலாளர் அன்புராஜூம், பி.எஸ்.எம்., கழகத் தோழர்கள் ஆல்பர்ட் போன்றவர்களும், கழகப் பொறுப்பாளர்களும் அவற்றை ஆரவாரமன்றிக் கவனித்து வருவது அறிய பெரு மகிழ்ச்சியாக அமைந்தது - நேரில் செல்ல திட்டமிடாமலே!

வருகிற மார்ச் மாதத்தில் சிறுகனூரில் தி.மு.. மாநாட்டுப் பந்தல் மட்டுமே சுமார் 300 ஏக்கருக்கு மேல்  பெரியார் உலகத்தின் எதிர்ப்புறத்தில் சமதளமாக நிறுவப்பட்டு;  மேலும் 300 ஏக்கரா நிலப்பரப்பில், தி.மு..வின் முதன்மைச் செயலாளரும், திராவிட இயக்கத்தின் திறமை மிக்க சீரிய செயல் வீரச் செம்மலுமான முன்னாள் அமைச்சர் சகோதரர் கே.என். நேரு அவர்கள் தனது தோழர்களுடன் இரவு பகல் பாராமல் ஒரு 'புது நகரத்தையே' அமைக்கும் அடிக்கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து கொண்டுள்ளன. எங்கெங்கும் தி.மு..வின் இரு வண்ணக் கொடிகள் பறந்து, "திராவிடம் வெல்லும்" என்று போர்ச் சங்கு முழங்கும் காட்சி, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. திமுகவின் இன்றைய ஒப்பற்ற தலைவர், உழைப்பின் உருவமாக ஓடோடி ஓய்வின்றி உழைக்கும் மக்கள் தலைவருக்கு, சகோதரர்

மு.. ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்டத் தளநாயகர் நேரு அமைக்கும் களம் திராவிடப் பாசறையாக திகழும் காட்சிக்கு அப் பரந்த விரிந்த - அதுவும் பெரியார் உலகம் எதிரே எதிர்புறத்தில் - இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருபுறமும் (மேடைக்கு நேரில் பெரியார் உலகம்) அமைவதுபற்றி அறிய வும், பெரியார் உலகத்துக்குள் சரிவர சாலைகள் அமைக்கப்பட்டு, ஏற்கெனவே இருந்த கொடிக் கம்பத்தை மாற்றி வைத்தபிறகு,  நம் கழகக் கொடியேற்ற பணித்தனர் கழகப் பொறுப்பாளர்கள்.

பார்க்கச் சென்றபோது எனக்குக்கிடைத்த 'போனஸ் மகிழ்ச்சி' - தி.மு.. கழகப் பொறுப்பாளர் களுடன் பெரியார் உலகத்திற்குள் வந்து மாநாட்டுத் திடலை பார்வையிட அன்புபொழுக  அழைத்தார் -  பெரியார் உலகத்தில் திராவிடர் கழகக் கொடியை ஏற்ற நான் முயற்சித்த நிலையில் கயிற்றை ஓர் இழுவைக்குப்பின் தி.மு.. முதன்மைச் செயலாளர் சகோதரர் நேரு அவர்கள் வாங்கி சரசரவென்று ஏற்றி இரட்டைக் குழல்தான் தி..வும் தி.மு..வும் என்பதை வரலாற்றில் பதிய வைத்தார். கூடியிருந்தோர் குதூகலம் அடைந்தனர்.

பிறகு பிரம்மாண்ட மாநாட்டுத் திடலை சமவெளியில் சென்று பார்த்து பரவசப்பட்டோம்! மாநாட்டு மேடை அமைப்புக்குப் பின்னால்

.வெ.ரா. மணியம்மையார் பவுண்டேஷன் சார்பில் மேல் நிலைப் பள்ளி அமைக்க வாங்கப்பட்டுள்ள நிலமும், இன்னொரு பெரியார் உலகத்தை நடுவில் நெடுஞ்சாலை தவிர மணியம்மையார்  கட்டட   இடங்கள், மாநாடு ஏற்பாடுகள் இணைந்து காட்டுவதுபோல எதிர்ப்பார்ப்பு ஏற்பாடுகள் நடந்த வண்ணமுள்ளன.

பார்த்து மகிழ்ந்து, பாராட்டி விட்டு தி.மு.., தி.., தோழர்கள் வழியனுப்ப, பெரியார் மாளிகைக்கு காலை 11 மணிக்குள் வந்து சேர்ந்தோம். படித்தேன் - எழுதினேன் - ஒய்வு என்ற பெயரில் புதுப்பணி அக மகிழ்ந்தோம். புத்துணர்ச்சியும், புத்தாக்கமும், புதுப் பூரிப்பும் பெற்றோம்.

தடுப்பூசி போட்டபின்பு மறு கட்டம் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

அதுவரை கட்டுப்பாடு காக்கத் தானே வேண்டும்!

தொந்தரவு செய்யாத தோழர்கள், "தொந்தரவில் தோழன் சுகங் கண்டான்" என்பது இப்போதுமட்டும்தான் இல்லை.

'பரோல்' முடிந்து சந்திப்போம்

விரைவில் (பரோல்) முடிந்து 'விடுதலை' கிடைக்கும் - சுதந்திரமாகப் பறக்கும் நாளை நாம் அனைவரும் நம்பிக்கையுடன் எதிர் நோக்குவோம் - மன்னியுங்கள் தோழர்களே!


கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

5-2-2021

No comments:

Post a Comment