கிரிக்கெட்டிலும் கார்ப்பரேட்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 25, 2021

கிரிக்கெட்டிலும் கார்ப்பரேட்!

அங்கு இங்கு எனாதபடி கார்ப்பரேட்டுகளின் கொடி களைகட்டிப் பறக்கிறது.

இங்கிலாந்துக்கும் - இந்தியாவுக்கும் இடையிலானடெஸ்ட் மேட்ச்' நடந்துகொண்டு வருகிறது. குஜராத் மாநிலம் அகம தாபாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு - வல்லபாய்ப் பட்டேல் பெயரைப் புறந்தள்ளி பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பந்து வீச்சாளர்களின் முனைகளுக்கு அதானி, ரிலையன்ஸ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

புரிகிறதா?

சேவாவாஹினி ஆம்புலன்சில் சிக்கிய துப்பாக்கிகள்! சங்பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது

பரவூர், பிப்.25 அம்பாடி சேவா கேந்திராவின் ஆம்புலன்சில் ஏர்கன் பறிமுதல் செய்த வழக்கில் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கொட்டவள்ளியைச் சேர்ந்த மிதுன், சேராய் நகரைச் சேர்ந்த சங்கர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அம்பாடி சேவா கேந்திரம் என்பது சங் பரிவாரின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும்.

கடந்த 21.2.2021 அன்று மாலை, பாப்புலர் ப்ரண்ட் ஆர்ப் பாட்டத்தின் போது மிதுன் ஏர்கன் உடன் வந்துள்ளார். உடன் சங்கர் என்பவர் இருந்துள்ளார். காவல்துறையினரைப் பார்த்ததும், துப்பாக்கியை ஆம்புலன்சிற்குள் மறைக்கவே, ஆர்ப்பாட்டக் காரர்கள் அதைப் பார்த்து விட்டனர். ஆம்புலன்சையும் சூழ்ந்து கொண்டனர்.இதையடுத்து சங்-பரிவாரப் பேர்வழிகள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஆம்புலன்ஸ் மற்றும் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே, பாஜக பிரமுகரான மிதுன் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் வன்முறையை தடுக்க உதவியது என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படு வதற்காக நடந்த முயற்சி குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்று டிஒய்எப்அய் ஒன்றிய செயலாளர் எஸ். சந்தீப் வலி யுறுத்தியுள்ளார்.

பாஜக ஓர் இடத்திற்கு மேல்  வென்றாலே பெரிய விஷயம்: சசிதரூர் எம்.பி., கருத்து

திருவனந்தபுரம், பிப்.25 ‘‘கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தீவிரமான போட்டியாளராக இருக்கும் என்று நினைக்க வில்லை. கடந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில்தான் வென்றது. இந்த தேர்தலில் அதற்கு மேல் அதிகமாக வென்றாலே அது பெரிய விஷயமாகத்தான் இருக்கும்'' என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியுள்ளார்.

நான் 53 வயதில் அரசியலுக்குள் வந்தேன். எனக்கு போதுமான தகுதி இருப்பதாக உணர்ந்தாலும்கூட, பெரிய தாக்கத்தை ஏற் படுத்த நான் தாமதித்துவிட்டதாக நினைக்கிறேன். அப்படியிருக்கும் போது 88 வயதில்பாஜகவில் சேரும்மெட்ரோ மேன்சிறீதரனைப் பற்றி என்ன சொல்வது?'' என்றும் தரூர்குறிப்பிட்டுள்ளார்.

கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதில் பெட்ரோல் விலையை குறைக்கலாம்!

மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்

புதுடில்லி, பிப்.25 மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  இதுவரை ரூ. 1,600 கோடி வரை வசூலித்துள்ளது. தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ராமர் கோயில் நிதி வசூல் குறித்து, தனது பத்திரிகையானசாம்னாவில், விமர்சனங்களை வைத்துள்ள சிவசேனா, “நாடு முழுவதும் கோவில் கட்ட நன்கொடை வசூ லிக்கும் பணி கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்குப் பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள். இதனால் ராம பக்தர் களுக்கு உணவு கிடைக்கும். ராமரும் சந்தோஷப்படுவார்'' என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடிகர்கள் அக்சய்குமார், அமிதாப் பச்சன் போன்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர்'' என்பதை நினைவுபடுத்தியுள்ள சிவசேனா, “தற்போது பெட்ரோல் விலை ரூ. 100- அய் கடந்த போதும் சினிமா நட்சத்திரங்கள் மவுனமாக உள்ளனர்'' என்று கூறியுள்ளது.

2014 ஆம் ஆண்டு வரை கருத்து கூற சுதந்திரம் இருந்தது. அரசை விமர்சிப்பவர்களை அப்போது, தேசத் துரோகவழக்கில் சிறையில் அடைக்கவில்லை. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூறவே முடியாமல் பேச்சுரி மையை இழந்துள்ளோம்'' எனவும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோல் வாங்குவதற்கு நேபாளம் செல்லும் உத்தரப்பிரதேச மக்கள்

மோடிக்கு அகிலேஷ் கண்டனம்...

லக்னோ, பிப்.25 கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் - டீசல் விலையை மோடி அரசு உயர்த்தி இருப்பதாக சமாஜ்வாடி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் விமர்சித்துள்ளார்.

‘‘பாஜக ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோராக்பூர் பகுதியில் உள்ள மக்கள் எரிபொருள் வாங்க நேபாளத்திற்கு தள்ளப்படு கிறார்கள். விலைவாசி எல்லாவற்றையும் குறைப்போம் என்று கூறித்தான் பாஜக அரசு மக்களிடம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், வாக்குகளை வாங்கிய பின்னர், தற்போது ஏன் பணவீக்கத்தை பற்ற வைக்கிறார்கள்? என்று தெரியவில்லை.

70 ஆண்டுகளில் நடைபெறாத விலை உயர்வை, பாஜக இந்த ஒரே ஆண்டில் நடத்திக் காட்டியுள்ளது''' என்று அகிலேஷ் கூறியுள்ளார். இந்தியாவை விடவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 61 ரூபாய்க்கும், நேபாளத்தில் ஒரு லிட்டர் 69 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment