இந்தியாவை அதிபர் ஆட்சியை நோக்கி நகர்த்தும் மோடி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 23, 2021

இந்தியாவை அதிபர் ஆட்சியை நோக்கி நகர்த்தும் மோடி அரசு

சிரோமணி அகாலிதளம் குற்றச்சாட்டு

 புதுடில்லி,ஜன.23- மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலை மையிலான பாஜக அரசு, கூட் டாட்சி என்ற கட்டமைப் பையே சீர்குலைத்து விட்டதாக சிரோ மணி அகாலிதளம் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம் சிங் சந்து மாஜ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஏஎன்அய் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப் பதாவது:

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்குடன் எங்களுக்கு அரசியல் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் மாநிலத்திற்குச் சேர வேண்டிய ஊரக வளர்ச்சி நிதியை அளிக்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்துவதை நாங் கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். பஞ்சாப்பிற்கான ஊரக வளர்ச்சி நிதி ஒதுக்கீட்டை, மத்திய அரசுதடுத்து நிறுத்துவது அரசமைப்பிற்கு விரோதமானது. இந்த நாடு, ஒற்றையாட்சி முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக எங் கள் கட்சி பார்க்கிறது. இது நாடாளுமன்ற அமைப்பிலிருந்து அதிபர் ஆட்சி வடிவிலான அர சாங்கத்தை நோக்கி நகர்வதற்கான அறி குறியாக இருக்கிறது. இது நல்ல முறை அல்ல.பட்ஜெட்டில் பல்வேறு தலைப்பிலான அத்தியாவசிய செலவினங்களுக்கு செலவழிக்க மாநிலங்களை அனுமதிக்காததன் மூலம் கூட்டாட்சி என்ற கட்டமைப்பையே மத்தியில் ஆளும் பாஜக சீர்குலைத்து வருவது குறித்து எதிர்க்கட்சியினரிடமும், பாஜக தோழமைக் கட்சிகளிடமும் நாங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறோம்.

இவ்வாறு பிரேம்சிங் சந்து மாஜ்ரா கூறியுள்ளார்.

சிரோமணி அகாலிதளம், கடந்த 2020 செப்டம்பர் வரை, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில்தான் அங்கம் வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment