பேரறிவாளன் விடுதலை காலம் கருதி அழுத்தம் கொடுப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

பேரறிவாளன் விடுதலை காலம் கருதி அழுத்தம் கொடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பேரறிவாளன் விடுதலை குறித்து மூன்று அல்லது நான்கு நாள்களில் தமிழக ஆளுநர் முடிவு செய்வார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு - தான் ஏற்கெனவே அமைச்சரவையில் முடிவு செய்து தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி இரண்டாண்டு ஆகியுள்ள நிலையில், இந்த மிக மிக முக்கிய தருணத்தில் ஆளுநரைச் சந்தித்து பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.

தி.மு.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல அனைத்து கட்சிகளும், சமூக அமைப்புகளும் பேரழுத்தம் கொடுக்கும் வகையில் தங்கள் தங்கள் கருத்துகளை உடனடியாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். எந்த பிரச்சினையானாலும் காலம் கருதி கடமையாற்றுவது தானே முக்கியம்! முக்கியம்!!

                                                                                                                                               

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

22.1.2021

Comments