ஒற்றைப் பத்தி : வள்ளலார்

குறிப்பிட்ட ஒரு நாளில் வள்ளலார் ஒரு மகத்தான அற்புதத்தை நிகழ்த்தப் போகிறார் என்கிற தகவலை கசியவிட்டார்கள். ஏனெனில் அற்புதம் போன்ற மாயங் களைச் செய்பவர்களை நோக்கித்தான் நிறைய கூட் டம் கூடும். அந்த கூட்டத்தை தம் சுய வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களின் திட்ட மாக இருந்திருக்கலாம்.

இந்த வதந்தி அப்போது காட்டுத்தீயாகப் பரவியது.

குறிப்பிட்ட நாளில் வட லூருக்கு விரைய தமிழக மெங்கும் மக்கள் தயாரா கினர்.

வடலூர் இராமலிங்க அடிகளாரின் காதுக்கு இந்த வதந்தி வந்தபோது மிகக் கடுமையாக வருந்தினார்.

தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்களே என்று வேதனையுற்றார்.

மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்ல, 'உலக அறிவிப்புப் பத் திரிகை' என்கிற பெயரில் 8.9.1873 அன்று தனியாக ஒரு விளம்பரமே செய்தார்.

"ஞான சித்திபுரம் என் றும், உத்தரஞான சிதம்பரம் என்றும் பிரமாணிக்கப்படு கின்ற வடலூர் சத்திய ஞான சபைக்கு முக்கிய சம்பந்தம் உடையதாகி, அடுத்த கருங் குழி எல்லை மேட்டுக்குப் பத்தில் வழி படப்படுகின்ற சித்தி வளாகத்தில் வந்திருக் கின்றவர்களும், வருகின்ற வர்களும், வருபவர்களு மாகிய ஜனங்களுக்கு அறி விப்பது.

மேல் குறித்த விடத்தில் இந்த மாதத்திற்கு அடுத்த புரட்டாசி மாதம் அய்ந்தாம் தேதியில் அற்புத விளக்கம் நேரிடுவதாக ஓர்வதந்தி வழங்கப்படுகின்றது. அது கேள்விப்பட்டு நம்புதலோடு நீங்களும் நீர்களும் பொருள் வகையாலும் தேகவகையா லும் உழைப்பெடுத்துக் கொண்டு பின்பு நிட்டூரப் பட்டுக் கொள்ளுதல் வேண் டாம். அந்தக் கேள்வி உண்மை அல்ல. இவ்விடத் தில் அற்புதம் விளங்குவது மெய்யோ, பொய்யோ, இந்தக் காலமோ, எந்தக் காலமோ. ஆகலில், இந்த அறிவிப்பினால் ஜாக்கிரதை யோடு உங்களுங்களுக்கு அடுத்த காரியங்களையோ அவைகளைச் செய்வீர் களாக. சிதம்பரம் இராமலிங்க பிள்ளை  என்று அந்த விளம்பரம் செய்யப்பட்டது.

குங்குமம்', 8.1.2021,

பக்கம் 63, 64

அற்புதங்கள்' என்று சொல்லி விளம்பரம் செய்து, தன்னிடம் தெய்வீக சக்தி உண்டு என்று கூறி நம்ப வைத்து, மக்களைச் சுரண் டும், ஏமாற்றும் மோசடி ஆன்மிக உலகில் வள்ளலார் எப்படி நடந்துகொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

 - மயிலாடன்

Comments