கோவிலுக்குள் பெண்ணை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல்: இருவர் கைது!
நாகப்பட்டினம்,
ஜன.8 நாகப்பட்டினம்
மாவட்டம் நாகத்தோப்பு அருகே கட்டட வேலை செய்யும் பெண்ணை வழிமறித்து, கோவிலுக்குள்
இழுத்துச் சென்ற இரண்டு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்முறை செய்து, அந்தப் பெண்ணிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்றனர். பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இக்குற்றச் செயலில் ஈடுபட்ட இரு இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற
காட்டுமிராண்டித்தனமான
செயல்கள் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் இதுவரை நடைபெற்று வந்தன. இப்போது தமிழகத்திலும் அதுபோன்று நடக்கிறது என்பது உத்தரப்பிரதேசமாக மாறுகிறதா தமிழகம் என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.