பெரியார் கேட்கும் கேள்வி! (226)

ஜாதி இருக்கும் வரையில்தானே ஜாதித் தொழில்? ஜாதித் தொழில் ஒன்று இல்லாவிட்டால் பிழைப்புக்கு வழி உண்டா? எல்லா மக்களும் படித்துவிட்டால் அவரவர் ஜாதித் தொழில் செய்ய முற்படுவார்களா? பேனா எடுக்கத்தானே நினைப் பார்கள்! நம் பெண்கள் எல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து விடுவார்களேயானால் களை எடுக்கச் செல்வார்களா? படித்து விட்டால் வயிற்றுக் கொடுமை ஒரு புறம் இருந்தாலும், பட்டினி கிடக்க முற்பட்டாலும் முற்படுவானே ஒழிய ஒருபோது ஜாதித் தொழில் செய்ய முன் வருவானா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments