ஆசிரியருக்குக் கடிதம் : தமிழக மருத்துவக்கல்லூரிக்கான இடங்களில் வேறு மாநிலத்தார் ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 28, 2020

ஆசிரியருக்குக் கடிதம் : தமிழக மருத்துவக்கல்லூரிக்கான இடங்களில் வேறு மாநிலத்தார் ஏன்

தமிழக மருத்துவக்கல்லூரிக்கான இடங்களில் வேறு மாநிலத்தார் ஏன்?


நான் 'விடுதலை' 15.11.2020 சென்னை ஏட்டின் 3ஆம் பக்கம் படித்தேன். அது பற்றி எழுதுகிறேன்.


தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. வேறு மாநிலத்தவர் அதிக இடங்களை அபகரித்துக் கொள்ளும் நிலை உள்ளது. உச்சநீதி மன்றமும் தமிழ்நாட்டைப் பாதுகாக்கவில்லை.


மருத்துவக் கல்லூரிகளை உருவாக்காத மத்திய அரசும், மாநில அரசுகளும் தமிழ்நாட்டைச் சூறையாடுகின்றன.  உச்சநீதிமன்றம் மத்திய அரசை மருத்துவக் கல்லூரி உருவாக்கச் சொல்லவில்லை. தமிழ்நாட்டைத்தான் உச்சநீதிமன்றமும் கெடுக்கப் பார்க்கிறது.


உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் தமிழக மருத்துவர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.


எல்லா 'நீட்' தேர்வுகளினாலும் ஏகப்பட்ட குளறுபடிகள்.


தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கி உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் வேறு மாநிலத்தவர் படிக்கின்றனர்.


தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகளால் தமிழக மக்களுக்குப் பட்டை நாமம் சாத்தப்படுகிறது.


தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.


- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி


No comments:

Post a Comment