தாராபுரம் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா தொகை ரூ.22,650 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கப்பட்டது


தாராபுரம் கழக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் 30.10.2020 அன்று மடத்துக்குளம் ஒன்றிய தோழர் தங்கவேல் இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், மாநில இளைஞர் அணி செயலாளர் இளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக தாராபுரம் நகர அமைப்பாளர் சின்னப்பதாஸ் 6 விடுதலை சந்தாக்களையும், தாராபுரம் நகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் முனைவர் கே. வி.சிவசங்கர், கழக ஒன்றியத் தலைவர் நாத்திக சிதம்பரம் ஆகியோர் 2 விடுதலை ஆண்டு சந்தாக்களையும், காரத்தொழுவு கிளைக் கழக அமைப்பாளர் த.நாகராசன் ஒரு விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன், அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், தாராபுரம் மாவட்ட செயலாளர் க.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நா.சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் கி.மயில்சாமி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் மா.சிவகுமார், மாவட்ட துணைச் செயலாளர் பழ. நாகராசன், மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் தங்கவேல், பகுத்தறிவாளர் கழகம் சஆறுமுகம், நா.செல்வராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ. மாயவன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் வெற்றி மணி, அர்ஜீனன் மற்றும் தோழர்கள். தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 10 அரையாண்டு சந்தா, 7 ஆண்டு சந்தா, 3 உண்மை சந்தாக்களுக்கான தொகை ரூ.22,650அய் முதல் கட்டமாக வழங்கினர்.


புதிதாக பிரிக்கப்பட்ட தி.மு.க திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணனுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, அவர் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களை வழங்கினார். உடன் மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் சிவக்குமார், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேல் மற்றும் தோழர்கள்.


Comments