பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை, செப். 29- பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச் சர் கே.பி.அன்பழகன் நேற்று(செப்.28) வெளியிட்டார்.


தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரிகள், உறுப் புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என 523-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அண்ணா பல் கலைக்கழகத்தின் பொதுக் கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள் ளன. அவர்களுக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சான்றி தழ் சரிபார்ப்புப் பணியும் நடைபெற்றது.


இதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட் டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தரவரிசைப் பட் டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் 1,12,406 மாணவர்களின் தரவரி சைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட் ஆஃப் மதிப்பெண்களோடு மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித் துள்ளார். அமைச்சர் கே.பி.அன்பழகன் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் பட்டியலை வாசித்தார்.


மாணவர்கள் <https://www.tneaonline.org/> என்ற இணையதளம் மூலமாகத் தங்களின் தரவரிசையை அறிந்துகொள் ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப் பின் மாணவர்கள், 044-22351014, 22351015 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள் ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் சான்றிதழ்க ளைப் பதிவேற்ற அவகாசம் கோரியதால், செப்.17, 25, 28 என தரவரிசைப் பட்டியல் வெளியீடு 3 முறை தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment