பாஜக ஆளும் கருநாடகா முழு அடைப்பால் முடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

பாஜக ஆளும் கருநாடகா முழு அடைப்பால் முடங்கியது


பெங்களூரு, செப். 29- மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருநாடகாவில் விவசாயிகள் நேற்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசு கொண்டு வந் துள்ள வேளாண் சட்டங்கள் மற் றும் நில சீர்த்திருத்த சட்டம், ஏபிஎம்சி தனியார் மயம், இலவச மின்சாரம் ரத்து உள்பட பல்வேறு சட்ட திருத்தங்களை கண்டித்து கரு நாடகாவில் 300க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவுடன் நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பெங்க ளுரு, பெலகாவி, மைசூரு, மண் டியா, ராம்நகரம், குடகு, ஹாசன், சிக்கமகளூரு, ஹாசன், மங்களூரு, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் முக்கிய சாலைகளில் போராட்டம் நடத்தினர். பெரும் பான்மையான மாவட்டங்களில் அரசு பேருந்து இயங்கவில்லை. தனியார் பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டது.


மத்திய அரசின் வேளாண் துறை சார்ந்த 3 சட்டங்கள், கரு நாடக அரசு கொண்டுவந்த வேளாண் அவசர சட்ட மசோதா ஆகிவற்றுக்கு அம்மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மத்திய, மாநில அரசு களின் விவசாய விரோத போக்கை கண்டித்து மாநில விவசாய சங் கங்களின் கூட்டமைப்பு நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு காங் கிரஸ், மஜத, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், கன்னட சங்கங்கள், கருநாடக லாரி உரிமையாளர் சங்கம்உட்பட 300-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.


பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, கல்புர்கி உட்பட மாநிலம் முழு வதும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பெங்களூரு டவுன்ஹால், மைசூரு வங்கி சதுக்கம், சுதந்திர பூங்கா, மெஜஸ்டிக் பேருந்து நிலை யம் உள்ளிட்ட இடங்களில்ஆயி ரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மத்திய, மாநில அரசு களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இதனால் பெங்களூருவில் பல் வேறு இடங்களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. மைசூரு, மண்டியாவில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தினர்.


கல்புர்கி, ஹூப்ளி, சிமோகா பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட் டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதி கமான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டதால் அங்கு போக்குவ ரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment