ஒருவர், ஆதி திராவிடர்களை இழிவு படுத்தப்படு கிறதா? இல்லை, இல்லை. நந்தனாரை நாங்கள் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய் பூசித்தும் வர வில்லையா? என்று வாய் வேதாந்தம் பேசுகின்றார். பறையனாய் இருந்த நந்தனார் திருநாளைப் போவாராகி விடவில்லையா? அப்படியிருக்க புராணத்தை ஏன் குற்றம் சொல்ல வேண்டும் என்கிறார், அந்த அறிவாளி. அந்த நந்தனுடைய பின் சந்ததியாராகிய பேரப்பிள்ளை களை அந்தத் திருநாளைப் போவாராகிய நந்தனிருக்கு மிடத்தைக் கூடப் போய் பார்க்க விடுவதில்லையே ஏன்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 18.8.1929
‘மணியோசை’
No comments:
Post a Comment