ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்: • அரசமைப்புச் சட்டப் பிரிவு 254 (2) பிரிவின் கீழ் மா நிலத்தில் அதிகார வரம்புக்குட்பட்டு, வேளாண் சட்டங்களைத் தவிர்க்க, தங்கள் மா நிலங்களில் சட்டங்களை இயற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்படி, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

 • பாதுகாப்புத்துறைக்கு வெளி நாடுகளில் இருந்து வாங்கும் ஆயுதங்கள் தொடர்பாக, இதுவரை நடைமுறையில் இருந்து வந்த, 30 சதவீத உயர் தொழில் நுட்ப விவரங்களை இந்திய ராணுவ மற்றும் அபிவிருத்தி அமைப்புக்கு வழங்க வேண்டும் என்ற விதியை மோடி அரசு நீக்கி விட்டது. அண்மையில் ரபேல் விமானம் வாங்கியதில் இத்தகைய ஒப்பந்தம் கடைப்பிடிக்கவில்லை என மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே, அந்த விதியையே தற்போது அரசு நீக்கிவிட்டது.

 • வெளி நாடு நன்கொடை திருத்த மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியதன் மூலம், நாட்டில் சமூகப் பணிகளை திறம்பட செய்து வந்த அரசு சாரா அமைப்புகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.


டெக்கான் கிரானிகல், சென்னை: • அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடியா அல்லது ஓபிஎஸ்ஸா என்ற வாக்குவாதம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது. முடிவு அக்டோபர் 7-ஆம் தேதி தெரியும்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்: • மோடி அரசின் வேளாண் மசோதாக்களை நாடு தழுவிய அளவில் எதிர்ப்பதற்கு அனைத்து மாநில கட்சிகளையும் ஒருங்கி ணைத்து கூட்டமைப்பு உருவாக்கப்போவதாக சிரோன்மணி அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிரேம் சிங் சந்துர்பார்ஜா, எம்.பி. தெரிவித்துள்ளார்.

 • அசாம் மாநில அரசு காவல் துறை உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு நடத்திய தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்தது தொடர்பாக பாஜக தலைவர், முன்னாள் டி.அய்.ஜி. உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • குஜராத் மாநில ஸ்டெர்லிக் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் வங்கியில் ரூ.8100 கோடி மோசடி செய்த வழக்கில் குஜராத்தைச் சேர்ந்த நான்கு இயக்குனர்கள் வெளி நாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் என டில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 • 1960-ஆம் ஆண்டு முதல் அன்றைய ஜனசங்கத்துடன் கூட்டணி என ஆரம்பித்து தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோன்மணி அகாலி தளம் விலகியது பஞ்சாப் அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

 • பாலிவுட் நடிகர்கள் மீது தொடர்ந்து திட்டமிட்டு தாக்குதலை சங் பரிவாரங்கள் நடத்தி வருகின்றன. பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் முஸ்லீம்களாகவும், உருது அதிகம் பேசப்படுவதும் காரணம். அந்த துறையை இந்தி மற்றும் இந்து மயமாக்கும் முயற்சியே என முன்னாள் பிரதமருக்கு ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


தி இந்து: • மாயாவதியின் பரசுராம் சிலை விவகாரம் கன்சிராம் தாழ்த்தப் பட்ட மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுக்கும் முயற்சிக்கும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அலகாபாத் ஜி.பி. பந்த் சமூக விஞ்ஞான கழகத்தின் இயக்குநர் பத்ரி நாராயணன் தனது கட்டுரை யில் விவரித்துள்ளார்.

 • தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை சாதாரண மக்கள் மீது அரசு பயன்படுத்தி அவர்களை மாதக்கணக்கில் சிறை வைக்கிறது என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் பி.லோகுர் தெரிவித்துள்ளார்.


- குடந்தை கருணா


29.9.2020


No comments:

Post a Comment