மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 9 பேர் மட்டுமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 9 பேர் மட்டுமே!

சன்யா திங்க்ரா, கிரித்திகா ஷர்மா


நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கான மொத்த இடங்களில் வெறும் 2.8 விழுக்காடு மட்டுமே ஆகஸ்ட் 1, 2020 நிலவரப்படி நிரப்பப்பட்டுள்ளது என்ற தகவல் பல் கலைக்கழக மானியக் குழு (UGC) அமைப்பிட மிருந்து பெற்ற தகவலை 'தி பிரிண்ட்' இணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.


அவற்றில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), டில்லி பல்கலைக்கழகம் (DU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), மற்றும் அலகாபாத் பல் கலைக்கழகம் ஆகியவற்றில் ஜனவரி 1,2020 நிலவரப் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் பதவி கூட நிரப்பப்படவில்லை என்ற அதிர்ச்சிகர செய்தியையும் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் 313 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. அவற்றில் வெறும் 9 இடங்களில் மட் டுமே அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளமை தற்பொ ழுது 'தி பிரிண்ட்' இணைய செய்தி ஊடகம் வாயிலாக தெரியவந்துள்ளது.


இடஒதுக்கீது செய்யப்பட்டுது 735


நிரப்பப்பட்டது 38


மேலும், UGC அமைப்பிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் வாயிலாக இணை மற்றும் உதவிப் பேராசிரி யர் பணிநிலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகிக்கும் எண்ணிக்கையும் தெரியவந்துள்ளது. அதன்படி இணை பேராசிரியர் (Associate Professor) பதவிகளில் இட ஒதுக்கீடு முறை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட 735 பணியிடங்களில் 5.17% மட்டுமே அதாவது, வெறும் 38 இடங்களையே நிரப்பியுள்ளனர். உதவிப் பேராசிரியருக்கான (Assistant Professorஷீ) 2232 பணியிடங்களில் 1327 இடங்கள் (60 விழுக்காடு) மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளி வந்துள்ளது.


கிரீமிலேயர் ஆபத்து


பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில், கிரீமிலேயருக்கான (Creamy layer) வரையறையில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டுள்ள வேளையில் இத் தகவல் வெளிவந்திருப்பது உற்று நோக்கத்தக்கதாகும். பா.ஜ.க மேற்கொள்ள விழையும் மாற்றத்தின் மூலம் இட ஒதுக்கீடு பெறும் பிற்படுத் தப்பட்டோரில் கிரீமிலேயரைக் (Creamy layerஷீ) கண்டறியும் வழிமுறையில் திருத்தத்தை ஏற்படுத்த எண்ணுகின்றனர். அதன்படி வருமானத்தைக் கணக் கிடும் முறையில் ஊதியத்தையும் (Salary) சேர்க்க  எண்ணுகிறார்கள். இத்தகைய திருத்தத்தை மேற்கொள் வதன் வாயிலாக ஏற்கெனவே அரசுத் துறைகளில் மிகக் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெற்று பணியமர்த்தப்பட்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை மேலும் குறையும் சூழல் உருவாகும் என பா.ஜ.க கட்சியின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழு வும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையமும் (National Commission for Backward Classes - NCBC) எச்சரித்துத் தடுத்து நிறுத்தியது.


இந்த விவகாரம் தொடர்பாக 'தி பிரிண்ட்' இணைய ஊடகம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையத்தின் (NCBC) கருத்தை அறியத் தொடர்பு கொண்டதில், இட ஒதுக்கீடு முறையில் மாற்றத்தை உட்புகுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையத்திடம் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவத்தை / எண்ணிக் கையைச் சேகரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  அறிவுறுத்தியதாக தெரியவந்தது.


மேலும், மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர் கல்விச் செயலாளர் அமித் காரே ஆகியோரின் கருத்தை அறிய 'தி பிரிண்ட்' தொடர்புகொள்ள முயற் சித்தும் அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் வர வில்லை என தெரிவிக்கிறது.


பல்கலைக்கழகங்களில் பேராசிரியப் பணியிடங் களில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை இத்தனை குறைவாக போனதற்குக் காரணம் பல்கலைக்கழக மானியக் குழு வழக்கில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப் படும் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர் பதவிகளுக்கு இரத்து செய்ய 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் UGC அம்முறையை நீக்கியது தான் காரணம். அதன்படி 27% இட ஒதுக்கீடு நடைமுறையை உதவி பேராசிரியர் பதவிகள் வரை மட்டுமே ஹிநிசி செயல் படுத்தி வருகிறது.


ஆசிரியப் பணிநிலையில் இடஒதுக்கீடு


எனினும், 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரி யப் பணிநிலையில் இட ஒதுக்கீடு) அவசரச் சட்டம் (Reservation in Teachers’ Cadre Ordinance, 2019) மத்திய அரசு நிறுவிய, மத்திய அரசின் உதவி பெறும் சில மத்திய கல்வி நிறுவனங்களின் ஆசிரியப் பணியி டங்களில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங் குடியினர்,  சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பு களைச் சேர்ந்தவர்களை நேரடி பணியமர்த்தும் முறை மூலம் அப்பணியிடங்களை ஒதுக்கும் நியமனத்திற்கு வழிவகை செய்தது. அதன் பின்னர், பேராசிரியர் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சூழல் உருவானது. ஆனாலும் அச்சட்டம் கொண்டு வரப்பட்டு ஓராண்டு ஆன நிலையிலும் தற்பொழுது வரை பல்கலைக்கழகப்பேராசிரியர் பணியிடங்களில் எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை.


அதற்கு  அப்பதவிகளுக்கு ஏற்ற தகுதி வாய்ந்த வர்கள் இல்லை என பல்கலைக் கழகங்கள் தரப்பில் காரணம் தெரிவிக்கப்படுகிறது. "பல பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான  பணியிடத்தை நிரப்புவதற்குத் தேவையான தகுதி வாய்ந்த ஒரு நபர் கூட நாட்டில் இல்லையென்று கூறுவது சாத்தியமில்லாதது" என்கிறார் தேசியப் பிற்பட்டோர் ஆணைய அலுவலர்.


பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்து பல்லாண்டு ஆயினும், பேராசிரியப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இடங்களை நிரப்பாமல் இருப்பதற்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபர்களுக்கான இடங்களை நிரப்பும் நடைமுறையில் ஈடுபட கல்வி நிறுவனங்களுக்கு எண்ணம் இல்லாதது மிக முக்கியமானது என்கிறார் டில்லி பல்கலைக் கழ கத்தின் பணியாளர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள் ளவரும் மகாராஜா அகர்சன் கல்லூரி பேராசிரியரு மான சுபோத்குமார்.


மேலும், "பேராசிரியர் பணியிடங்களில் இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் இடங்களை நிரப்புவதற்கு மிகவும் அரிதாகவே ஊடகங்களில் விளம்பரம் செய்யப் படுகிறது. டில்லி பல்கலைக்கழகத்தில் ஓ.பி.சி. பணியிலிருந்து விளம்பரம் வந்து வெகு நாளாகிறது" என்கிறார் அவர்.


"பல மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் ஜாதி யைச் சேர்ந்தவர்களே துணை வேந்தர் பதவிகளில் இருக்கின்றனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர் பதவிகளை வகிப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அதனால் பல்கலைக் கழக பணியிடங்களை உயர் ஜாதியினருக்கே வழங் கும் போக்கு ஏற்படுகிறது. பல்கலைக்கழகங்களில் உயர் ஜாதி கலாச்சாரத்தை புகுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்கிறார் பணி நிரப்புதல் தொடர்பான வழி காட்டுதல்கள் செய்பவரான குமார்.


மேலும், "பேராசிரியர் பணிகளுக்கான பணியி டங்களை நிரப்பும் செயல்முறை காலதாமதானது என்றும், அரசு நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு முறை காலந்தாழ்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டதால் அதை செயல்படுத் துவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், மிக முக்கிய மாக அண்மைக் காலமாக கல்வி நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடை முறையில் புகுத்தப்பட்டிருக்கும் முறைப்படி பணி யமர்த்தப்படுபவர் "குறிப்பிட்ட சித்தாந்தத்தை" சார்ந்த வராக இருக்கவேண்டும். அவ்வாறில்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியக் குறைவே" என்கிறார் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியரும், சில நேர்காணல் குழுக்களில் இடம் பெற்றவருமான பேரா.நரேந்திரகுமார்.


ஆனால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பெயர் தெரிவிக்க விரும்பாத சில அதிகாரிகள் இன் னும் தகுதி வாய்ந்த நபர்கள் கிடைக்கவில்லை என்று குறை கூறுகிறார்கள்.


- நன்றி: 'தி பிரிண்ட்', 24.8.2020


தமிழில்: அ.சி கிருபாகரராஜ்


No comments:

Post a Comment