மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை, ஆக. 31- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தர சன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு, பாஜக மத்திய அரசு, வரி விதிப்பு முறை களை சீரமைக்கிறோம் என்கிற பெயரில்,   ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை 2017 ஜூலை முதல் தேதியி லிருந்து அமலாக்கி வருகிறது.


இந்தப் புதிய வரிவிதிப்பு முறையால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என் பதால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங் கள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது  ஜி.எஸ்.டி. வரிமுறையால், மாநிலங்க ளுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடு கட்ட 2017 முதல் 2022 வரையிலும் 5 ஆண்டு காலத்திற்கு  இழப்பீடு தருவதாக மத்திய அரசு உறுதியளித்து, உடன் படிக்கை செய்து கொண்டது.


ஆனால், மத்திய அரசும், நிதித்துறை யும் மாநிலங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை  மதிக்காமல் அத்து மீறி வருகிறது.கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, கரோனா நோய் தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநிலங்களில் நிலவி வந்த நிதி நெருக்கடி மேலும் ஆழப்பட்டு, மீள வழியின்றி சிக்கித் தவிக்கின்றன. கரோனா நோய் பேரிடர் காலத்தில் மாநிலங்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு தனது கடமைப் பொறுப்பை கை கழுவி விட்டது.


ஜி.எஸ்.டி. வரியால் ஏற் படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் மட்டும்  தமிழ்நா ட்டிற்கு ரூபாய் 12 ஆயிரத்து 258 கோடிக்கு மேல் மத்திய அரசு பாக்கி தர வேண்டும். இதுகுறித்து அண்மையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கேட்டபோது. மத்திய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது பொதுக்கடன் சந்தையில் நிதி திரட்டிக் கொள்ளுங்கள் எனக் கூறி, தனது சட்டபூர்வக் கடமைகளை சோப்புப் போட்டு கை கழுவிக் கொண்டார்.


கடுமையான நிதிச் சுமையால், கழுத்து முறிந்து, கடனில் மூழ்கிக் கிடக் கும்  தமிழ்நாட்டை மேலும் கடன்கார னாக்கி, மீள முடியாத கொத்தடிமை ஆக்கும் மத்திய அரசின் வஞ்சகச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன் மையாகக் கண்டிக்கிறது.


ஜி.எஸ்.டி. இழப்பீட்டு பாக்கித் தொகை உட்பட தமிழ்நாட்டிற்கு மத் திய அரசு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத் திக் கேட்டுக் கொள்கிறது.


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment