ஒற்றைப் பத்தி: ‘அட கடவுளே!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 5, 2020

ஒற்றைப் பத்தி: ‘அட கடவுளே!'

1992 ஆம் ஆண்டு போபால் யூனியன் கார் பைடு நிறுவனத்தில் விஷ வாயு பரவி 22,000 பேர் மரணம் அடைந்தனர். உடல் ஊனம் உள்பட பாதிக் கப்பட்டவர்கள் 5,74,367 பேர்; என்றாலும், ஒரு லட் சத்து 5,500 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்று கூறி, அந்த நிறுவனம் வழங்க முன்வந்த தொகை ரூ.173 கோடி.


நீதிமன்றத்தில் கார்பைடு நிறுவன வழக்குரைஞர் என்ன சொன்னார் தெரி யுமா?


‘‘வெளியேறிய வாயு மிகவும் நச்சுத் தன்மை கொண்டது என்பதும், உயி ருக்கு ஆபத்தானது என் பதும் உண்மைதான். ஆனா லும் நடந்த விபத்துக்கு நாங்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? இது கடவு ளின் செயல்; எந்த மனித னையும் கடவுளின் செய லுக்குப் பொறுப்பாக்க முடி யாது.''


‘‘It was an act of god for which no human being was responsible'' என்று நீதி மன்றத்திலேயே கடவுளைத் துணைக்கழைத்தார் கார் பைடு நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்.


ஈராக், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போர் தொடுத் தார். ஆயிரக்கணக் கான  மக்கள்  போரில் கொல் லப்பட்டனர். சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.


அமெரிக்க அதிபருக்குப் பல நாடுகளிலிருந்தும் கண் டனக் கணைகள் வெடித்துக் கிளம்பின. அப்பொழுது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னது என்ன தெரியுமா?


‘‘George Bush has claimed he was on a mission from God when he launched the invasions of Afghanistan and Iraq 2003.''


‘‘2003 ஆம் ஆண்டு ஈராக், ஆப்கானிஸ்தான்மீது போர் தொடுக்கும்முன் முக் கியமான ஒருவரிடம் அனு மதி பெற்றுவிட்டேன். அந்த முக்கியமானவர் வேறு யாரு மல்லர் - கடவுள்'' என்றாரே பார்க்கலாம்.


உலகத்தைப் படைத்தது யார்? மனிதனைப் படைத் தது யார்? என்ற கேள்வி களுக்கெல்லாம் எல்லா மதங்களுமே கூறும் பதில் கடவுள் என்பதுதான்.


அந்தக் கடவுள் சர்வ வல்லமை படைத்தவர் (Omnipotent), எங்கும் நிறைந்தவர் (Omni presence), தயாபரன் (Omni benevolence) என்று எல் லாம் சொல்லுகிறார்களே!


மேலே எடுத்துக்காட்டப் பட்ட இரு நிகழ்வுகளுக்குப் பிறகும் இதனைச் சொல்ல முடியுமா?


விஷவாயுவால் லட்சக் கணக்கானவர்கள் கொடூர மாகச் சாகடிக்கப்பட்டதற் கும், ஒரு போரில் பல்லா யிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கும் கட வுளே காரணம் என்று சொல்லியிருப்பவர்கள் கடவுளை மறுக்கும் நாத்தி கர்கள் அல்லர் - கடவுளை நம்பும் ஆத்திகர்களே!


- மயிலாடன்


No comments:

Post a Comment