ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 29, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல பயணக் கட்டணம் எதுவும் பெறக்கூடாது; எவரையும் தடுக்கக்கூடாது. உணவு, தண்ணீர் தர வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • தனது பண்ணையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பத்து பேரையும் அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல, விமானக் கட்டணத்தையும் செலுத்தி அனுப்பி வைத்தார் அதன் உரிமையாளர்.

  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள்; தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்கு அதிக கட்டணம், இரண்டும் குறித்து தலையங்க செய்தி வந்துள்ளது.

  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலைகுறித்து இதுவரை பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. ஏழைகள்மீது ஏன் இத்தனை அவமதிப்பு? தன்னைத் தவிர யார்மீதும் பிரதமருக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் தற்போதைய சம்பவங்கள் மக்கள் மனதில் எழும்புகிறது என ஆனந்த் கே.சகாய் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளர்.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • தமிழ்நாடு, மகாராட்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து எந்தவித போக்குவரத்தும் கருநாடக மாநிலத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என கருநாடக அரசு முடிவெடுத்துள்ளதாக மாநில சட்ட அமைச்சர் மதுசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

  • கரோனா தொற்று நேரத்தில் தாழ்த்தப்பட்டோர்மீதான தாக்குதல் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா தெரிவித்துள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் மத்திய அரசின் முடிவை ஏற்கும்படியும், இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

  • ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12.20 கோடி பேர் இந்தியாவில் வேலை இழந்துள்ளனர் என சி.எம்.அய்.இ. என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • கரோனா தொற்று தடுப்புப் பணியில் குஜராத் அரசு மீது கண்டனம் தெரிவித்த குறித்து குஜராத் நீதிமன்ற நீதிபதிகள் அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, வேறு நீதிபதிகளிடம் வழக்கு தரப்பட்டுள்ளது.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • அரியானா மாநிலத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் இந்தி கட்டாய மொழி என்ற அரசின் ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மனு.


டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:



  • மோடி அரசின் முதல் ஆண்டு நிறைவில், பொருளாதார, அரசியல் சிக்கல் மட்டுமே தென்படுகிறது. கரோனா தொற்று இதனை இன்னமும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என அய்.அய்.எம். பெங்களூர் முன்னாள் பேராசிரியரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினருமான ராஜீவ் கவுடா தனது, கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


- குடந்தை கருணா,


29.5.2020


No comments:

Post a Comment