'நமதுகடமைகள்' -  தமிழர் தலைவருடன் காணொலிக் கலந்துறவாடல் பெரியார் பன்னாட்டு மய்யம் (அமெரிக்கா) முன்னெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

'நமதுகடமைகள்' -  தமிழர் தலைவருடன் காணொலிக் கலந்துறவாடல் பெரியார் பன்னாட்டு மய்யம் (அமெரிக்கா) முன்னெடுப்பு

பெரியார் பன்னாட்டு மய்யம் (அமெரிக்கா) -Periyar International (USA) முன்னெடுத்து நடத்திய தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களுடனான காணொ லிக்  கலந்துறவாடல் நிகழ்வில், 'நமது கடமைகள்' எனும் தலைப்பில் ஆசிரியர் ஆற்றிய உரையானது, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெரும்பான் மையாக அமெரிக்காவில் இருந்து,  இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத் தையும் அளித்தது.


குடும்பத்தலைவர்-கடல் கடந்து வாழும் பிள்ளை களிடம் பேசும்பொழுது வெளிப்படும் அக்கறையும், குறிப்பாக இக்கரோனா நெருக்கடிநிலையில் கரிசனமும்;


ஆசிரியர் -   மாணாக்கர்கள் சிறப்பாக செயல்பட அளிக்கும் உற்சாகமும், கவனம் கொள்ள வேண்டு வனற்றை முதன்மைப்படுத்தியதும்;


இயக்கத்தலைவர்- சமூகமாக நாம் செயல்படுத்த வேண்டிய கடமைகளை நினைவுறுத்தி நெறிப்படுத்து தலும், வழிகாட்டுதலும்;


ஆகிய மூன்று பரிணாமங்களையும்  ஒருங்கே வெளிப்படுத்த தந்தை பெரியாரது வழித் தோன்றல், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மட்டுமே இயலும் என்பதை மீண்டும் உணர்த்திய நிகழ்வாக அமைந்தது.


திராவிடர் இயக்கத்தைப் போன்றதொரு இயக்கம் உலகெங்கு தேடினும் இல்லாததற்கு காரணம் “சொந்த சோற்றை தின்று கொண்டு இயக்கக் கொள்கைகளை பரப்பும் தொண்டர்களை கொண்டதே" என்ற பெரியார் கூற்றை கோடிட்டு, 'சொந்த சோறு' என்ற சொல்லாக் கத்தை சிறப்பாக ஆசிரியர் விளக்கினார்.


மேலும் ஆசிரியர் விளக்குகிறார் "சொந்த காலில் சுயமாக நின்று கொண்டு தொண்டறம் ஆற்றும் தோழர்களின் பணிவீட்டிலிருந்து தொடங்க வேண் டும்". கரோனா துயர்காலத்திலும் ஏற்பட்ட நல்வாய்ப் பாக தத்தமது குழந்தைகள், வாழ்விணையர், பெற் றோர் என குடும்பத்தினரோடு கலந்துறவாடவேண்டும் என்பதை Charity begins at home என்ற சொற் றொடரை தொடர்புபடுத்தி விளக்கினார்


தற்பொழுது நிலவும் நிச்சயமற்ற சூழலும், அத னால் ஏற்படும் உளைச்சல்களும் தற்காலிகமானவை என்றும் ,அதனை எதிர்கொள்ளும் மனவுறுதியும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் நாம் என்று தளர்வடை யாமையை வலியுறுத்தினார்.


கணியன்பூங்குன்றனாரின் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா'  தமிழர் நெறி - நமது அறிவும், ஆற்றலும், அணுகு முறையும், திட்டமிடுதலும், தெளிவுறுதலுமே முடிவு களை நிர்ணயிக்கும் காரணிகள் என்று சுவைபட விளக்கி பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டினார்.


‘நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் முடியும்' என்று கொள்கைப் பணி  மேற்கொள்ள, தன்னளவில்  ஒருவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளுதலின் அவசியத்தையும், காலச் சூழ்நிலை மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்றவாறு திட்டமிடுதல் மற்றும் தயார்படுத்திக் கொள்ளுதலின் தேவையையும்  எடுத்துக் கூறினார்.


மேலும் முடிவுரையின்போது ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’ நாளேடு படிப்பதன் மற்றும் பரப்புதலின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு நமது சமூக கடமையை அறிவுறுத்தினார். 58ஆண்டுகளுக்கும் மேலாக ‘விடு தலை’ நாளேட்டின் ஆசிரியராக சிறப்பான பணியாற்றி வரும் தமிழர் தலைவரின் அறிவுறுத்தல் நாம் உடனடி யாக ஏற்கவேண்டிய கடமையாகும்.


வெளிநாடுகளில் வாழும் சுயமரியாதை உணர்வா ளர்கள் கலந்துரையாடி கொள்கை வளம்பெறுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுள் பொருளாதார  நிலை யிலும் உதவி தேவைப்படுவோருக்கு உதவும் வண் ணம் ஒரு நிதியம் ஏற்படுத்துவதன் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அறிவுரை கூறினார்.


சிகரம் வைத்தாற்போன்று "பெரியாரை உலகமய மாக்குவோம்; உலகத்தை பெரியார் மயமாக்குவோம்" என்று இரு வரிகளில் நமது கொள்கை கடமைகளை அறுதியிட்டுக் கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.


கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக வெளியுறவு செயலா ளர் கோ. கருணாநிதி, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பாக முனைவர். இரவிசங்கர் கண்ணபிரான்,  கவி ஞர் ம.வீ.கனிமொழி ஆகியோர் பங்கேற்று பேசினர்.


பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத் துவர் சோம.இளங்கோவன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நெறியாள்கை செய்தார்.


- கார்க்கி,


கலிஃபோர்னியா, அமெரிக்கா


 


தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை எதிரொலி!


தேனி மாவட்டத்தில் விடுதலை பரப்பும் பணி


ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் அறிவித்தபடி "விடுதலை" வாசகர் விளைச்சல் பெரு விழா "எவரும் செய்ய முடியாததை நாம் செய்வோம்" என்ற உறுதியுடன் "இனிய குடும்பம்" என்று ஏற்கெ னவே அமைக்கப்பட்ட குழுவிற்கு "தினசரி கீலீணீts கிஜீஜீஇல் தங்களுக்கு விடுதலை நாளிதழ் அனுப்பி வைக்கிறேன். படித்து பயனடைய வேண்டுகிறேன்" என அனுப்பி வைத்தேன். அந்த குழுவில் சுமார் 50 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.


பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களின் ஆலோசனை கேட்டு 256 பேருக்கு அனுப்பும் வசதியை தெரிந்து கொண்டு அதன்படி ஒரே நொடியில் அத்தனை நண்பர்களுக்கும் அனுப்பினேன். உடனே ஒவ்வொருவரிடமிருந்து "நன்றி மகிழ்ச்சி வணக்கம்" என பதிலளித்தார்கள். தினமும் படிப்பதாகவும் மற்றவர் களுக்கும் பரப்புவதாக வும் தெரிவித்தார்கள். மொத்தம் சுமார் 306 நபர்களுக்கு விடுதலை படிக்க அனுப்பியிருக் கிறேன் என் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


- போடி ரகுநாகநாதன், தேனி மாவட்ட தலைவர்


ஒசூர் பகுதியில் விடுதலை பரப்புதல்


அய்யா வணக்கம்!


தாங்கள் விடுதலை வாயிலாகவும்,காணொலி காட்சி வாயிலாகவும் விடுத்த விடுதலை பரவ வேண்டிய அவசியத்தை யும், வேண்டுகோளையும் ஏற்று ஒசூர் பகுதியில் இயக்க குடும்பம்,பல்வேறு அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள், நண்பர்கள், பத்திரிகை செய்தியாளர்கள் தன்னார்வாளர்கள், பல்வேறு இயக்கத் தினர், தற்போதுவரை 600 நபர்களுக்கு கட்செவி


வாயிலாக  அனுப்பப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச் சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் பொது செயலாளர் இரா.ஜெயகுமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், ஆகியோர் ஆலோ சனை வழிகாட்டுதலின்படி செயல் வடிவம் பெற்று நடைமுறைப்படுத்தி வருகிறேன்.


 நன்றி


 தங்கள் அன்புள்ள


சு.வனவேந்தன்


மாவட்டதலைவர், ஒசூர்


No comments:

Post a Comment