இந்துக்களின் கடையில் கொடியை நட்டு அடையாளமிட்ட இந்து அமைப்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

இந்துக்களின் கடையில் கொடியை நட்டு அடையாளமிட்ட இந்து அமைப்பினர்

பெங்களூரு மே 25 கர்நாடகாவில் பெரும் பாலான நகரங்களில்  உள்ள கடைகளின் முன்பு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் திடீரென காவிக் கொடிகளைக் கட்டியுள்ளனர்.


இந்துக்கள் நடத்தும் கடைகளை அடையாளம் காட்டும் விதமாக வகுப்புவாத நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளது.


பல கடை உரிமையாளர்களுக்கு இந்தக் கொடிகளைக் கட்டியது யார் என்றே தெரிய வில்லை. அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த மைத்ரேயி கிருஷ்ணன் என்ற தோழர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்து இருக்கிறார்.


டில்லி கலவரத்தின் போது இந்துக்களுக்குச் சொந்தமான கடைகள் நிறுவனங்களை அடையாளப் படுத்துவதற்கும், இந்து அல் லாத வர்களின் கடைகளைக் குறிப்பிட்டுத் தாக்கு வதற்கும் இதே உத்தியைக் கலவரக் காரர்கள் பயன்படுத்தினர் என்பது நினை வுக்கு வருகிறது. கரோனா காலத்திலும் திட்டமிட்ட மதவெறிப் படுகொலைகளுக்குக் களம் அமைத்துத் தரும் வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் இந்து அமைப்பினர் ஈடுபட்டுவருகின்றனர்.


ஊரடங்கிற்குப் பிறகு ஜூன் முதல் தேதி முதல் முழுமையான விலக்குகள் அளிக்கும் போது கடைகளுக்கு மக்கள் அதிகம் வரத் துவங்குவர் அப்போது இந்துக்கள் கடைகளை அடை யாளம் கண்டு அங்கே இந்துக்கள் பொருட்களை வாங்கவேண்டும் என்ற மறைமுக திட்டத்தோடும். கலவரம் ஏற்படும் போது இந்து அல்லாதவர்கள் கடைகளை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்ற வன்முறை திட்டத்தோடும் இத்தகைய செயலை இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.


 கர்நாடகாவில் தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக எதிர்கட்சி சட்டமன்ற உறுப் பினர்களை விலைக்குவாங்கி ஆட்சி அமைத் துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment