திருவாரூர் மாவட்ட காணொலி கலந்துறவாடல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அருந்ததியர் நுழைந்த புரட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

திருவாரூர் மாவட்ட காணொலி கலந்துறவாடல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அருந்ததியர் நுழைந்த புரட்சி!

கழகத் துணைத் தலைவர் உரை



திருவாரூர், மே.25 திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகக் காணொலி கலந்துறவாடல் கூட்டம் மே


2ஆம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.


கூட்டத்தில், திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், மண்டலத் தலைவர் ஓவியர் சங்கர், மாநில இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். அப்போது, தங்கள் பகுதியில் உள்ள தோழர்களோடு அடிக்கடி தொடர்புகொண்டு பேசி வருவதாகவும், தங்கள் இயன்ற உதவிகளைச் செய்து வருவதாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கரோனா கால 21 கட்டளைகளை செயல்படுத்தி வருவதாகக் கூறினர்.  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை யாற்றினார்.


கழகத் துணைத் தலைவர் உரை


திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும் போது, கரோனா பெருந் தொற்றால் ஊரடங்கலாம் ஆனால் பெரியார் சிந்தனை அடங்காது என்பதற்கு அடையாளமாக காணொலி மூலம் கலந்துறையாடல் கூட்டடம் நடைபெற்று வருகிறது.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள், கழக வழக்குரைஞரணி மற்றும் இளைஞரணி உள்ளிட்ட 5 கூட்டங்களில் காணொலி வாயிலாகப் பேசி, அவர்களுக்கு உற்சாகமூட்டி வருகிறார்.


இந்நிலையில், நமது தோழர்கள் பல மாவட்டங்களில் கலந்துறவாடல் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில், வாழ்வியல் முறைகளை நாம் சிக்கனமாக கையாள வேண்டும். தேவைக்கு செலவு செய்வதே சிக்கனமாகும்.


நியாயமாக பார்த்தால் மத்திய அரசு கரோனாவை கட்டுப்படுத்த தவறியிருக்கிறது. இன்றைய கேடு பாடான சூழலுக்கு மத்திய அரசே காரணமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சீனாவில் கரோனா பெருந்தொற்று பரவியிது. உலக சுகாதார நிறுவனம் ஜனவரி 18 ஆம் தேதி கரோனா பெருந் தொற்று உலகை பாதிக்கும் என அறிவித்தது.


ஆனால், மத்திய அரசோ  மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சியை அமைப்பதிலேயே கவனமாய் இருந்தது. அதன்பிறகே கரோனா பற்றி மத்திய அரசு வாய் திறந்தது. அதன்பிறகு அவசரமாக ஊரடங்கு எனும் ஆபத்தான போக்கை உருவாக்கியது என்றார்.


இந்த பிரச்சனைகளிலிருந்து நாம் மீள ஆசிரியர் வழிகாட்டுதல்களை படிக்க வேண்டும். நம் இயக் கத்தைப் பொறுத்தளவில் பிரச்சாரம், போராட்டம் என்பது கடிகாரத்தின் பெண்டுலம் போன்றதாகும். நாம் அரசியல் பக்கம் செல்லாமல், அரசியலில் யார் வர வேண்டும் என்பதை தீர்மானிக்கிறோம்.


பெரியார் கொள்கைகளில் அடிப்படை கொள்கை யாகவும், இன்றியமையாத கொள்கையாகவும் விளங்கு வது ஏற்றத்தாழ்வாற்ற சமு தாயத்தை உருவாக்குவது தான். ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை கொளுத் தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்த போது, அந்த போராட்டத்தில் அதி களவில் பங்கேற்றவர்கள் திரு வாரூர், நாகை, கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த தோழர்கள். நம்முடையத் தோழர்கள் கொள்கையை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டவர்கள். திருவா ரூர் மாவட் டத்துக்கென்று ஒரு தனிச்சிறப்புண்டு விடயபுரம் என்னும் ஊரிலே 1967 ஆம் ஆண்டு மே மாதம் 10 நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அந்தபட்டறையிலே தான் முதன் முத லாக கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்பு தத்துவங் களை தந்தை பெரியார் உலகுக்கு வழங்கினார். அதே போல் மாவூர் எனும் ஊரில் சர்மா எனும் பார்ப்பனர் தோட்டத்தில் பெரியார் பயிற்சி முகாமை நடத்தியிருக் கிறார். இவை எல்லாம் வரலாற்று நிகழ்வுகள்.


இன்று வடமாநிலங்களில் மாணவர்கள் போராட் டம் நடத்துகின்றபோது பெரியார், அம்பேத்கர் படங்களை கையில் ஏந்தி போராடி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பெரியார் வாழ்க எனும் முழக்கங்கள் விண்ணை பிளக்கின்றன. இந்துத்துவா தத்துவத்தை எதிர்க்க பெரியார் கொள்கைகள் ஆயுதமாகக கையாளப்பகிறது. இவ்வாறு பெரியார் இன்று உலகத் தலைவராக பரிணமித்திருக்கிறார். இதற்கு காரணம் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான்.


கரோனா பல இன்னல்களை ஏற்படுத்தியிருந்தாலும் நிலை நன்மைகளையும் செய்திருக்கிறது. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் மூடப்பட்டுள்ளன. சித்திரை திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. அழகர் ஆற்றில் இறங்கவில்லை. அதே நேரத்தில் அருந்ததியர் மதுரை மீனாட்சி அம்மன் கர்ப்பகிரகத்துக்குள் சென்று கிருமி நாசினி தெளிக்கிறார். இதன்மூலம் நமது கொள்கை வெற்றி பெற்றுள்ளது என்றார்.


கரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் திருவா ரூர் மாவட்டத் தோழர்கள் தனி பயிற்சி வகுப்புகளை நடத்தி கழகத்தில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்களை இணைக்க வேண்டும். விவசாய சங்கத்தை புதுப்பிக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.


கூட்டத்தில், மாவட்ட அமைப்பாளர் சாமிநாதன், திருத்துறைப்பூண்டி மாவட்ட செயலாளர் கிருட்டின மூர்த்தி, எரவாஞ்சேரி இராஜா, மாவட்ட இளைஞ ரணித் செயலாளர் பிளாட்டோ, மாவட்ட ப.க செய லாளர் அசோக்ராஜ், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர் அரங்க.ஈவெரா, நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் கரிகாலன், மாவட்ட விவசாய அணித் தலைவர் தங்கபெருமாள், திருவாரூர் நகர செயலாளர் இராமலிங்கம், மருதம்மாறன், சோழங்கநல்லூர் கவுதமன், குடவாசல் செல்வகுமார், நன்னிலம் தன் ராஜ், மாவட்ட விவசாய அணித் தலைவர் இரத்தின சாமி, வசந்தா கல்யாணி, மண்டோதரி, பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், கிடாரங்கொண்டான் கலிய மூர்த்தி, செல்வேந்திரன், திருநெய் கோவிந்தரா ஆகி யோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினர்.


No comments:

Post a Comment