கரோனா ஜாதியை ஒழித்திருக்கிறது, கடவுளை ஒழித்திருக்கிறது, மதத்தை ஒழித்திருக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

கரோனா ஜாதியை ஒழித்திருக்கிறது, கடவுளை ஒழித்திருக்கிறது, மதத்தை ஒழித்திருக்கிறது

கும்பகோணம் கழக மாவட்ட காணொலி கலந்துரையாடல்


கழகத் துணைத் தலைவர் உரை



கும்பகோணம்,மே 23 கும்பகோணம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 28.04.2020 அன்று மாலை 6 மணியளவில் காணொலி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று உரையாற்றினார். கும்பகோணம் கழக மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். கும்ப கோணம் கழக மாவட்டத் துணைச் செயலாளர்


ஆ. தமிழ்மணி வரவேற்புரையாற்றினார்.


கழகத் துணைத் தலைவர் உரை


1957இல் தந்தை பெரியார் அவர்கள் சட்ட எரிப்புப் போராட்டத்தை ஜாதி ஒழிப்பிற்காக அறிவித்த நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரத் துக்கும் மேற்பட்ட தோழர்கள் அந்தப் போராட்டத் திலே ஈடுபட்டார்கள். அந்தப் போராட்டத்தை அறிவித்த நேரத்தில், சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று கிடையாது. பெரியார் அவர்கள் அறிவித்ததற்கு பின்னால் அவசர அவசரமாகச் சட் டத்தைக் கொண்டு வந்தார்கள். 3 ஆண்டு சிறைத் தண்டனை என்று தெரிந்த பின்பும், தமிழ்நாடு முழு வதும் 10,000 தோழர்கள் சட்டத்தைக் கொளுத்தி னார்கள். திருப்பனந்தாள் பற்றி ஒரு செய்தியை கூற வேண்டும் அங்கே தோழர்கள் நூற்றுக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், அதிலே குறைவான வர்களை சிறையில் அடைத்துவிட்டு மற்றவர்களை விட்டு விட்டார்கள் அப்படி விடுவிக்கப்பட்ட தோழர்கள் நேராக காவல் நிலையம் சென்றார்கள் எங்களை ஏன் விட்டு விட்டீர்கள் என்று கேட்க அதற்கு காவல்துறை நீங்கள் சட்டத்தைக் கொளுத்த வில்லை என்றனர். அதற்கு அவர்கள் இப்பொழுது கொளுத்திவிட்டு சிறைக்குச் செல்வோம் என்றனர். இப்படிப்பட்ட தொண்டர்களை வேறு எந்த இயக்கத் திலாவது பார்க்க முடியுமா?  மூன்றாண்டு சிறைத் தண்டனை என தெரிந்த பின்பும் எங்களை ஏன் கைது செய்யவில்லை, எங்களுக்கு ஏன் தண்டனை அளிக்க வில்லை, இது எங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு, நாங்கள் எப்படி திரும்ப வீட்டுக்கு செல் வோம், பெரியாரை எப்படிச் சந்திப்போம் என்ற வரலாற்று நிகழ்வை ஏற்படுத்திய சிறப்பு மிகுந்த ஊர்தான் இந்த குடந்தை பகுதி திருப்பனந்தாள். இப்படி ஒவ்வொரு ஊரையும் பற்றி பல்வேறு கருத் துகளை கூறலாம். தாராசுரம் என்றால் நூற்றுக் கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் ஒரே குடும் பத்தில் நடைபெற்றன என்ற வரலாற்றுப் பெருமை உள்ள ஊர். முத்துதனபால் என்ற ஒரு வழக்குரைஞர் இருந்தார், அவரைப் பற்றி பொதுவாக சொல்வார்கள் இவர் பேச ஆரம்பித்தால் கடிகாரத்தை வைக்கக் கூடாது, காலண்டரைத்தான் வைக்கணும். அப்படி பேசிக்கொண்டே இருப்பவர் குடந்தை மாரிமுத்து கம்பீரமான மனிதர். வெங்கட்ராமன் என்ற பெரியவர் இருந்தார். பழைய விடுதலையில் எல்லாம் எழுதி இருக்கிறார். அவர் ஒருமுறை பெரியாரைப் பார்த்து, “அய்யா, கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டால் நம்ம குடிஅரசு பத்திரிக் கையை ஏராளம் வாங்குவார்கள்" என்று சொன்ன பொழுது, தந்தை பெரியார், “நான் வியாபாரத்திற்காக குடிஅரசு தொடங்கவில்லை கொள்கைக்காக தொடங்கி இருக்கிறேன், இந்த குடிஅரசை நானே எழுதி, நானே அச்சடித்து, நான் மட்டும்தான் படிப்பேன் என்றாலும் குடிஅரசு வரும்" என்று வெங்கட்ராமனிடத்திலே தந்தை பெரியார் கூறிய நிகழ்ச்சியும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1943 ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் பிறப்பதற்கு முன்னாலேயே குடந்தைப் பகுதியில் திராவிட மாணவர் கழகம் துவங்கப்பட்டது. அதனுடைய 75ஆம் ஆண்டு பவள விழா மாநாடு குடந்தையில் மிகக் கம்பீரமாக நடத்தினோம், திராவிடர் கழகத்திலே இளைஞர்கள் உண்டா என்று கேள்வி கேட்டவர்களுக்கு உண்டு என தந்தை பெரி யாருக்குப் பின்னால், அன்னை மணியம்மையாருக்குப் பின்னால் இந்த இயக்கம் இளைஞர்களால் உருப் பெற்று வருகிறது என்று உலகத்திற்கு அறிவித்த ஒரு மாபெரும் மாநாட்டை இந்த குடந்தை பகுதிகளில் நடத்தினீர்கள். என்னுடைய ஆதங்கம் என்ன வென்றால் நம்முடைய தோழர்கள் பெரிய பெரிய நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், மாநாடு முடிந்ததற்கு பின்னாலே ஓய்ந்து விடுகிறார்கள். இது இயக்கப் போக்கிலே சிறிய குறைபாடாகும். ஒரு மாநாட்டை சிறப்பாக நடத்தினால் அந்த மாநாட்டால் ஏற்படும் விளைவு இயக்கத்திற்கு இளைஞர்கள் வந்து சேர வேண்டும். புதிய இளைஞர்களை இயக்கத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் மாநாட்டிற்காக எவ்வளவு பாடு பட்டோமோ, அதைவிட அதிகமாக பாடுபட்டால் இயக்கத்திற்கு இளைஞர்கள் வருவார்கள். இதை ஒரு பாடமாக ஏற்க வேண்டுமென கழகத் தோழர்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.


ஊரே அடங்கி விட்டது, உலகமே அடங்கி விட் டது, ஆனால் கருப்புச் சட்டைக்காரர்கள் அடங்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சிந்தனை அடங்காத சிந்தனை, உலகத்தைப் பற்றி சிந்திக்கக் கூடிய சிந்தனை. அதனால்தான் நம்முடைய தலைவர் அவர்கள் இந்த காணொலி முறையை அறிமுகப்படுத் தினார்கள். தோழர்களை சந்திக்கவேண்டும், சந்திக் காமல் இருக்க முடியாது. மாலைநேரம் என்றால் தந்தை பெரியாரைப் போல் மக்களை சந்தித்து சந்தித்து பழக்கப்பட்டவர் _ 87ஆம் ஆண்டு வயதில் 70 ஆண்டுகள் அப்படியே பழகிவிட்டவர். இந்த நிலையில் தம்மை சிறைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்காக தோழர்களை சந்திக்கும் முறையை 4 காணொலிகள் அரங்கேற்றப்பட்டு மே தினத்தன்று தொழிலாளர் அணியினருடனும் மகளிர் அணியின ருடனும் கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றி னார் என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டி ருக்கிறேன்.  நானும் இரண்டு மூன்று காணொ லிகளில் தோழர் ஜெயக் குமார் உட னும் தோழர் குணசேகரன் உடனும் இணைந்து தோழர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்பும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த கரோ னாவினால் நாம் முடங் கினாலும் சில கருத்துகள் சில நெருடல்கள் சில வெற்றிகள் இதனுள் இருப்பதை நாம் மறந்து விட முடியாது, தற் போது எந்த நோயாளி யாவது, எந்த அரசியல்வாதி யாவது அண்மைக் கால மாகக் கடவுளைப் பற்றி பேசுகிறானா? நன் றாக நினைத்துப் பாருங்கள் அவனின்றி ஓரணுவும் அசையாது என்றார்களே, இப்பொ ழுது அதைப்பற்றி பேசுகிறார்களா இல்லை இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமானால் கோயில்கள் எல் லாம் இழுத்து மூடப்பட்டிருக் கின்றன, சர்ச்சுகள் எல் லாம் இழுத்து மூடப்படுகின்றன, மசூதிகள் எல்லாம் இழுத்து மூடப்பட்டுவிட்டன. கோவிலுக்கு வராதீர்கள், சர்ச்சுப் பக்கம் தலையைக் காட்டாதீர்கள், மசூதிக்கு வராதீர்கள் என்று சம்பந்தப் பட்ட மத வாதிகளே அறிக்கை விடக் கூடிய அளவிற்கு கரோனா ஒரு வகையிலே நல்ல காரியத்தை செய்திருக் கிறது என்றுதான் கருதவேண்டும்.


திருப்பதி தேவஸ்தானம் சொல்லு கிறது மே மாதம் இறுதி வரை கோயில் திறக்கப்படாது, தரிசனம் கிடை யாது என்று அறிவித்துவிட்டார்கள். அய்யப்பன் கோவில் நடை சாத்தப்பட்டு விட்டது. மதுரையில் சித்திரை_1 கோலாகல விழா கள்ளழகர் ஆற்றில் இறங்குவார் என்றெல்லாம் கூறுவார்கள். இன்றைக்கு என்ன ஆச்சு ஒன்றும் இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது. ஒரு செய்தி, வேடிக்கையான செய்தி நாம் கோயில் கருவறைக்குள் செல்லா விட்டாலும்கூட, தாழ்த்தப் பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் கோவில் கருவறைக்குள் செல்ல  வேண்டும் என்ப தற்காக தந்தை பெரியார் அவர்கள் போராட்டங்களை அறிவித்தார்கள், அதில் ஓரளவு வெற்றி பெற் றிருக்கிறோம்.


ஆனால், பார்ப்பனர்கள் உச்சநீதிமன் றம்வரை சென்று பார்ப்பனரல்லாதவர்கள் சூத் திரர்கள் கருவறைக்குள் சென்றால் சாமி சிலை தீட் டாகிவிடும் சாமி செத்துவிடும் என்று சொன்னார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு பட்டர் அவருடைய தாயார் மரணமடைந்தார், இந்த பட்டர் அமெரிக்கா சென்று வந்த செய்தியை மறைத்து விட்டார்கள். அவர் மூலம்தான் கரோனா நோய்த் தோற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்கிறார்கள். இன்றைக்கு அந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறைக்குள் சென்று கிருமிநாசினி அடித்திருக் கிறார்கள். யாரென்றால் தாழ்த்தப்பட்டத் தோழர்கள் நன்றாக சிந்தித்துப் பாருங்கள் மற்றவர்கள் சென்றால் கருவறை தீட்டுப்பட்டு விடும், சாமி செத்துவிடும் என்று சொன்னார்கள். இன்று கோயில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்டத் தோழர்கள் கிருமிநாசினி அடித்தி ருக்கிறார்கள். ஒருவகையில் இந்த கரோனா ஜாதியை ஒழித்து இருக்கிறது. கடவுளை ஒழித்திருக்கிறது. மதத்தை ஒழித்து இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.


இந்த கரோனா முடிந்த பின்னரே சில புள்ளி விவரங்கள் வரும். கரோனா முடிந்த பின்னாலே நாத்திகர்கள் எத்தனை பேர்? அதில் எத்தனை ஏற்றம் இருக்கிறது என்பதெல்லாம் வெளிவரும். இந்த கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங் கினால் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளை ஞர்களை அதிகமாக இயக்கத்தின்பால் ஈர்க்க வேண்டும். இது ஏதோ பெரிய நெருக்கடி என்று தோழர்கள் நினைத்துவிடக்கூடாது. நெருக்கடி காலத்தில்கூட அன்னை மணியம்மையார் அவர்கள் விடுதலை நாளிதழினை நடத்தவில்லையா?  இயக்கம் எதிர்காலத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் கட்டுக்கோப்பாக இயக்கத் தின்பால் இருக்க வேண்டும். இது ஒரு புரட்சிகரமான இயக்கம், இன்றைக்கு மதவாத இருள் இந்தியாவை கவ்விக்கொண்டு இருக்கிறது, தந்தை பெரியாரின் சுயமரியாதை தத்துவம்தான் அதற்கு மருந்து, ஆகவே தோழர்களே எதிர்காலம் நம்முடையதாக இருக்க வேண்டுமென்றால் நம்முடைய உழைப்பும் சிந்தனை யும் இயக்கத்தை நோக்கி இதைவிட பலமடங்கு உயர வேண்டும் இவ்வாறு கழகத் துணைத்தலைவர் உரையில் குறிப்பிட்டார்.


இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்:


தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி, கும்ப கோணம் கழக மாவட்ட அமைப்பாளர் வ.அழகுவேல், மாநில இளைஞரணித் துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக துணை செயலாளர் ச.அஜிதன். மண்டல இளைஞரணிச் செயலாளர் வே.இராஜவேல், கும்பகோணம் பெருநகரத் தலைவர் கு.கவுதமன், செயலாளர் பீ.இரமேஷ், கும்பகோணம் ஒன்றியத் தலைவர் த.ஜில்ராஜ், பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க.பூவானந்தம், திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் பட்டம் வீ.மோகன், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், கும்பகோணம் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவக்குமார், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் லெனின் பாஸ்கர், நாச்சியார்கோவில் பா.கவுதம், செல்வக் குமார், சிங்கப்பூர் விஜயக்குமார், கும்பகோணம் மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் அரவிந்தன், சோழபுரம் மாணவர் கழகத் தோழர் சி.அவினேஷ் ஆகியோர் காணொலி கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


தீர்மானம் 1:  இரங்கல் தீர்மானம்


பெரியார் பெருந்தொண்டர் பட்டீஸ்வரம் அய்யாசாமி அவர்களின் இளைய மருமகளும், அ.இராவணன் வாழ்விணையருமாகிய இரா.கலைவாணி அவர்கள் கடந்த 18.4.2020 அன்று மறைவுற்றமைக்கும், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்து உயிரி ழந்த மருத்துவர்களுக்கும், உலகம் முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்த மக்களுக்கும் இந்த கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம்:2


தமிழர் தலைவரின் 21 கட்டளைகளை செயல்படுத்துவோம்


தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் கழகத் தோழர்களுக்கு ஊரடங்குகால பணிகளாக வகுத் தளித்துள்ள 21 கட்டளைகளை ஏற்று செயல்படுத் துவது என தீர்மானிக்கப்படுகிறது.


தீர்மானம்:3


விடுதலை நாளிதழுக்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி


உலகமே அஞ்சக்கூடிய கரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கத்தின் இரத்த ஓட்டமான விடுதலை நாளிதழை தங்குதடையின்றி தொடர்ந்து நடத்தி கரோனா தொற்றிலிருந்து தப்புவது எப்படி என அறிக்கைகள், வாழ்வியல் சிந்தனைகள், தலை யங்கம். பல்துறை அறிஞர்கள் மற்றும் மருத்துவர் களின் கட்டுரைகள்மூலமாக கழகத் தோழர்கள் மற்றும் விடுதலை வாசகர்களுக்கும், உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழ்ப் பெருமக்களுக்கும் உத்வேகத் தையும் மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டு தலையும் வழங்கி வரக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளை யும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம்:4


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி


கரோனா தொற்று பரவல் தடுப்புக்கான ஊர டங்கில்  இக்கட்டான காலகட்டத்தில் கழகத் தோழர்களுடன் கைபேசியிலும், காணொலி மூல மாகவும் தொடர்புகொண்டு பேசி கழகத் தோழர் களுக்கு உற்சாகத்தையும், இக்கட்டான சூழ் நிலையைக் கையாளும் ஆக்கப்பூர்வ வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம்:5


கரோனாவிற்கு பிறகு மாவட்ட கழக செயல்பாடுகளின் திட்டம்



  1. தொடர் பிரச்சாரங்களை முன்னெடுப்பது.

  2. மாவட்டம் முழுவதும் உள்ள தந்தை பெரியார் சிலைகள், கழகக் கொடிக் கம்பங்கள், படிப்பகங்களை புதுப்பிப்பது.

  3. வாட்ஸ்அப் மூலம் விடுதலை றிஞிதி அனுப்பப் பட்டு, அதனை தொடர்ச்சியாகப் படித்து வரும் நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களை விடுதலை சந்தா தாரராக மாற்றிட வேண்டியது.

  4. விடுபட்ட சந்தாக்களை புதுப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.


தீர்மானம்:6


காவிரி நதிநீர் ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்தின்கீழ் இணைப்பது என்கிற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 25.4.2020 தேதிய கண்டன அறிக்கையை இந்த கலந்துரையாடல் கூட்டம் வழிமொழிந்து, மத்திய அரசு உடனடியாக அந்த திட்டத்தினை கைவிடக்கோரி  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் போராட்டங்களை எழுச்சியோடு நடத் துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.


No comments:

Post a Comment