காணொலி மூலம்  வழக்குகள் விசாரணை : டில்லி உயர்நீதிமன்றம் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

காணொலி மூலம்  வழக்குகள் விசாரணை : டில்லி உயர்நீதிமன்றம் முடிவு


புதுடில்லி, மே 23, உயர்நீதிமன் றத்தின் அனைத்து அமர்வுகளும் அவசர வழக்குகள் அனைத் தையும் காணொலி மூலம் இன்று முதல் விசாரிக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட வில்லை. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் சிலஅமர்வுகள் மட்டுமே அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரித்து வருகிறது.


மார்ச் 24ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்றங்கள் 20,726 அவசர வழக்குகளை விசாரித்துள்ளன.


இன்று (மே 22) முதல் டில்லி உயர்நீதிமன் றத்தின் அனைத்து அமர்வுகளும் அனைத்து அவசர வழக்கு களையும் விசாரிக்க உள்ளது. இதற்கான உத்தரவை டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் பிறப்பித்து உள்ளார். அனைத்து வேலை நாட்களிலும் டில்லி உயர்நீதி மன்ற அமர்வுகள் தினந்தோறும் விசாரிக்கும் என்று உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மனோஜ் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


டில்லி உயர் நீதிமன்றத்தில் 7 டிவிசன் அமர்வு நீதிபதிகளும், 19 தனி நீதிபதிகளும் உள்ளனர்.


No comments:

Post a Comment