பாதுகாப்பான கிருமிநாசினி அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

பாதுகாப்பான கிருமிநாசினி அறிமுகம்

கோயம்புத்தூர், மே 28-  நுகர்வோர் முகமூடிகள், கையுறைகள், பயணத் தின்போது சானிடிசர்களை எடுத்துச் செல்வது மற்றும் தங்களைக் காப்பாற்ற மேற்பரப்பு கிருமிநாசினிகளைப் பயன்படுத்து கின்றனர். இருப்பினும், இந்த முன்னெச்சரிக்கைகள் தவிர, துணி கிருமி கேரியராக இருக்கக்கூடும் என்பதால் ஒருவரின் துணிகளை கிருமி இல்லாமல் வைத்திருப்பது முக்கியம். கிருமிகள் இல்லாத பாதுகாப்பிற்கான அதிகரித்துவரும் தேவையை ஒப்புக் கொண்ட விப்ரோ சேஃப்வாஷ் ஆண்டிஜெர்ம் லிக்விட் டிடர்ஜென்ட் அறி முகம் செய்கிறது.


தனி மனித இடைவெளி - சுகாதாரத்துடன்


இருசக்கர வாகன விற்பனையகங்கள் திறப்பு


சென்னை, மே 28- பியாஜியோ இந்தியாவின் வெஸ்பா மற்றும் ஏப்ரெல்லா வாகனங்களின் முகவர்களுக்கான விற்பனையகங்கள் தமிழகத்தில் உள்ளன.  இந்த விற்பனை யகங்கள் அனைத்தும் இப்போது திறக்கப்பட்டுள்ளன. உள்ளூர் அதிகாரிகளின் உரிய அனுமதிகளைப் பெற்று அவை திறக்கப்பட்டுள்ளன.


விற்பனையகங்களில் அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பாக தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, கை குலுக்காமல் வணக்கம் தெரிவிப்பது, கிருமி நாசினிகள் பயன்படுத்துவது, முகக் கவசங்கள் அணிவது போன்றவற்றை கண்டிப்பான முறையில் பின்பற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்கள் விற்பனையகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தொலைபேசி வழியாகவே முன்பதிவு செய்து சேவைகளைப் பெறலாம் என பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டிகோ கிராபி தெரிவித்துள்ளார்.


நான்கு சக்கர வாகன சிறப்பு சலுகைகள்


மும்பை, மே 28- வாடிக்கையாளர்களின் பயண வாகனமான ஜீப் எஸ்யூவியை முன்பை விட அதிகம் அணுகக் கூடியதாக மாற்றக்கூடிய நிதி திட்டங்களின் தொகுப்பான ஜீப் ஃபார் ஆல்  அய்  எப்சிஏ இந்தியா   அறிவித்துள்ளது.


கார்ப்பரேட் சம்பள வாடிக்கையாளர்களுக்கு குறைக்கப்பட்ட சமனாக்கப்பட்ட மாதாந்திர தவணைகள் (ஈ.எம்.அய்), வங்கிகளிடமிருந்து மிகக் குறைந்த கடன் வட்டி விகிதங்கள், பெண்களுக்கு 100% சாலை விலை நிதி, வேலை இழப்பு பாதுகாப்பு, தீவிர நோய், விபத்து ஆகியவைகளுக்கான காப்புறுதிகளை வழங்கும் வகையில் “ஜீப் ஃபார் ஆல்” புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முதல் 24 மாதங் களில் குறைந்த ஈ.எம்.அய் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கும் ஒரு ஏற்பாடாகும் என இந்நிறுவன தலைவர் டாக்டர் பார்த்தா தத்தா தெரிவித்துள்ளார்.


நவீன வென்டிலேட்டர்கள் அறிமுகம்


சென்னை, மே 28- இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தியாளரும், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் சிறந்த பங்காற்றி, தனி அடையாளத்தைப் பெற்றுள்ள நிறுவனமுமாகிய சோனாலிகா டிராக்டர், தற்போது கரோனா நோயாளிகள், பிரச்சனை இல்லாமல் மூச்சு விட உதவும் வென்டிலேட்டர்களிலேயே அதிநவீன வசதிகளைக் கொண்ட நுட்பமான மாடலை அறிமுகம் செய்துள்ளது. இன்டெலி ஜென்ட் வென்டிலேட்டர் சிஸ்டம்ஸ் எனக் குறிப்பிடப் படும் இது, கால நேர தேவை புரிந்து, அதற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க வசதிகளை தன்னகத்தே கொண்டது.


சோனாலிகா தற்போது உருவாக்கியுள்ள இந்த அதிநவீன வென்டி லேட்டர் - உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளியின் மிக நுட்பமான மருத்துவத் தேவை முதல். அதற்கு முந்தைய பல்வேறு நிலைகளில் உள்ள நோயாளிகளின் சாதாரண தேவைகள் வரை  சூழ லுக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி கொண்டது என   சோனாலிகா குழுமத்தின் செயல் இயக்குனர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment