ஏட்டுட்த் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

ஏட்டுட்த் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • மகாராட்டிர அரசில் பங்கேற்றுள்ள கட்சிகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் சார்ந்து இருத்தல் வேண்டும் என தலையங்கச் செய்தி கூறுகிறது.

  • கரோனா தொற்று தடுப்புப் பணியில் கேரள மாநிலத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என ஆகார் படேல் தனது கட்டு ரையில் விவரித்துள்ளார்.

  • மகாராட்டிர முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேயுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்பு கொண்டு தங்கள் கட்சியின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.

  • சீன நாட்டின் கட்டுப்பாட்டு விதிகளை ஏற்க மறுத்துப் போராடும் ஹாங்காங் மக்கள், சீன நாட்டின் தேசிய கீதத்தை அவமதித்தால் கடும் தண்டனை என சீன அரசு தெரிவித்துள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • தொடர்ந்து முழு அடைப்பு மேற்கொள்வது இந்தியாவின் பொரு ளாதாரச் சீரழிவை ஏற்படுத்தும் என பொருளாதார அறிஞர்களுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் நடத்திய கருத்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.

  • குறைந்த தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகளைத் துவங்க தொழிலதிபர்கள் தயக்கம்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • இணையம் வழியே தனியார் பள்ளிகள் வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். வகுப்புகள் நடத்தலாம்; ஆனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கட்டா யப்படுத்தக்கூடாது என தற்போது தெரிவித்துள்ளார்.

  • இந்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உலக தொழிலாளர் அமைப்பின் அறிவுரைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என தலையங்கச் செய்தி கூறுகிறது.

  • தனியார் மருத்துவமனைகளும் கரோனா தொற்றுச் சிகிச்சையை ஏன் இலவசமாகத் தரக்கூடாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது.

  • தங்கள் அரசின் அனுமதி பெற்று மா நிலத் தொழிலாளர்களை பிற மாநிலங்கள் பணிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற அறிவிப்பை உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசு விலக்க இருக்கிறது.

  • ஹாங்காங் நகருக்கு தந்த சிறப்பு சலுகை அந்தஸ்தை அமெரிக்கா விலக்கிக் கொண்டது. இது சீன வர்த்தகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • இமாச்சல் பிரதேசத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு மருந்துகள் வாங்கியத்தில் முறைகேடுகள் நடைபெற்று ஊழல் விசாரணை துவக்கிய நிலையில் அம்மாநில பாஜக தலைவர் ராஜீவ் பிண்டால் பதவி விலகியுள்ளார்.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த இந்து பெண் தாக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பஞ்சாப் காவல்துறை பாஜக தலைவரை கைது செய்துள்ளது.


தமிழ் இந்து நாளிதழ்:



  • புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையை தானாகவே உச்ச நீதிமன்றம் எடுத்ததன் பின்னணியில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் விதமாக நீதித்துறை அரசாங்கத்துக்கு அடிபணிந்து கிடப்பதாக ப.சிதம்பரம் உட்பட 10 வழக்குரைஞர்கள் காட்டமான கடிதம் எழுதியுள்ளனர்.


- குடந்தை கருணா,


28.5.2020


No comments:

Post a Comment