சென்னை மண்டல இளைஞரணி காணொலி கலந்துரையாடல் கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 29, 2020

சென்னை மண்டல இளைஞரணி காணொலி கலந்துரையாடல் கூட்டம்!

விடுதலைக்கு வாசகர் சங்கிலி மூலம் வாகை சூடி வரிந்து கட்டுவோம்


பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் உரை!



சென்னை, மே 29 சூழ்நிலைகளையும் நமக்கு சாதகமாக்கிக் கொள்ளவேண்டும் என்று தத்துவப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழிக்கேற்ப உலகம் முழுவதும் கரோனா பிடியில் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் கழகத் தலைவர் , தமிழர் தலைவர் அவர்களின் முன்னெடுப்பின் நீட்சியாக சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக 20.05.2020 புதன்கிழமை மாலை 7 மணிக்கு துவங்கி 8.45 வரை சிறப்பாக நடைபெற்றது.


கூட்டத்திற்கு சென்னை மண்டல இளைஞரணி செய லாளர் இர.சிவசாமி அவர்கள் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட  வட சென்னை, தென் சென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்டச் சேர்ந்த இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது கரோனா ஊரடங்கு காலத்தில் மேற்கொண்டுள்ள பணிகளையும், அனுபவங்களையும், மனித நேய அடிப்படையில் செய்த வாழ்வாதார உதவிகளையும் பகிர்ந்து கொண்டனர். தோழர் களின் கருத்துரைகளுக்குப் பிறகு மண்டலச் செயலாளர் இர.சிவசாமியின் தலைமை உரையில், வணிக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்டுள்ள  அசாதாரண நிலை யினை விளக்கினார்.


இறுதியாக சிறப்புரையாற்றிய பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தனது உரையில்:


நாம் சமூகப் புரட்சிக்கான போர் வீரர்கள்! உடலுக்குத்தான் முடக்கம் - சிந்தனைக்கு அல்ல என்று கழகத் தலைவரால், கழகத் தோழர்களுக்கு வேண்டுகோளாக விடுத்துள்ள 21 அம்ச பணிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதனைத் தொடர்ந்து தலைவருக்கும்-தொண்டருக்குமான தொடர்பாக விளங்குவது “விடுதலை” நாளிதழ் தான் எனவே, அந்த விடுதலை நாளிதழை இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் விஞ்ஞானத்தின் உதவியுடன் தினசரி பகல் 2.30 மணிக் கெல்லாம் சந்தாதாரர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இணைய வழியாக (வாட்ஸ் அப் செயலி) கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி தொய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கத்தின் இதயமான “விடுதலை” நாளிதழ்  வரும் ஜூன் 1 ஆம் தேதி 86 ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது. எனவே 'வாட்ஸ் அப் செயலி' மூலமாக அதிகமாக 'விடுதலை'  நாளிதழை  வாசகர்களிடம் சேர்ப்பது குறித்து எடுத்துரைத்தார். மேலும் இந்த கரோனா காலத்தில் கழகத் தலைவரின் அறிவார்ந்த அறிக்கைகளையும், ஆலோசனைகளையும் இந்த மத்திய - மாநில அரசுகள் காதில் வாங்குவதாக இல்லை ஆகவே, இளைஞரணித் தோழர்கள் தங்களது பகுதியில் உள்ள கழகத் தோழர்களுடன் தொடர்பில் இருப்பதோடு மட்டுமல்லாமல் சிரமத்தில் இருக் கும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை வாழ்வாதார உதவிகளை செய்ய வேண்டும். இளைஞரணிப் பொறுப்பாளர்கள் குறிப்பாக தாம்பரம் இர.சிவசாமி, வட சென்னை தளபதி பாண்டியன், திருவொற்றியூர் தமிழ்மாறன் என்ற சதீஷ் , பொன்னேரி சுதாகர், தென்சென்னை சிவசீலன் போன்றோர் தங்களது பகுதியில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களை கண்டறிந்து பெரிய அளவில் தொடர்ச்சியாக உதவி வரு வதையும் பாராட்டியதோடு, அவர்கள் செய்த உதவிகளை முகநூலிலும், சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஊரடங்கு காலத்திலும் உலக புத்தகநாளை ( 23.04.2020 ) முன்னிட்டு இயக்க நூல்களை இணையத்தில் 50 சதவீத கழிவில் 10 நாட்களுக்கும் மேலாக பதிவு செய்யலாம் என்று கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பினை பிற இதழ்களும் (இந்து -தமிழ் திசை) பாராட்டின என்று கூறினார். தொண்டறச் செம்மல் அன்னை ஈவெரா நாகம்மையாரின் நினைவு நாளான மே 11 ஆம் தேதியை பெண்கள் உரிமைப் பேரிகை நாளாக தமிழர் தலை வரால் அறிவிக்கப்பட்டது முதல் கழக மகளிர் அணியினர் சார்பாக தொடர்ந்து காணொலி வாயிலாக கருத்தரங்கங்கள் நடைபெற்று வரு வதையும் சுட்டிக்க்காட்டினார். இந்த காணொலி நிகழ்வுகள் நடைபெறும் என்று 70 ஆண்டுகளுக்கு முன்பே தனது அறிவியல் தொலைநோக்கு பார்வையில் தந்தை பெரியார் எழுதியிருந்ததை இளைஞர்களுக்கு நினை வூட்டிய பேசியப் பொதுச்செயலாளர், இளைஞரணித் தோழர்கள் தங்கள் படிக்கும் நூல்களில் பிடித்தவற்றை “படித் ததில் பிடித்தது” என்று விடுதலைக்கு எழுத வேண்டும் என்று அறிவுறுத்தினார். இறுதியாக தோழர்கள் சிக்கனமாக இருக்க வேண்டும்  என்று கூறி தனது உரையினை நிறைவு செய்தார். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவாக அண்ணாநகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ் நன்றி கூறினார். மகிழ்வுடன் நிறைவுற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்தினை சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்  சோ.சுரேஷ் ஒருங்கிணைத்தார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


தீர்மானம் -1 :  விடுதலையை ஒரு லட்சம் பேரிடம்


                     கொண்டு சேர்த்தல்!


ஜூன் 1 அன்று தனது  86 ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் விடுதலை நாளிதழை இளைஞரணித் தோழர்கள் ஓவ்வொருவரும் குறைந்தது 50 நபர்களுக்கு தனியாக அனுப்புவது என்று தீர்மானிக்கப்படுகிறது.


தீர்மானம் - 2 : தமிழர் தலைவரின்


           21 கட்டளைகளை செயல்படுத்துவோம்


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகத் தோழர் களுக்கு ஊரடங்குகால பணிகளாக விடுத்துள்ள 21 கட்டளை களை ஏற்று செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.


தீர்மானம் -3 : தமிழக அரசின் அறிவிப்பை திரும்பப்


                 பெறக்கோரி போராட்டம்!


அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை 59 ஆக உயர்த்திய தமிழக அரசின் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி கரோனா ஊரடங்கு முடிவுக்குப் பிறகு கழக இளைஞரணி போராட்டம் நடத்தும் என்று தமிழர் தலைவர் அறிவித்துள்ள போராட் டத்தை சிரத்துடன் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக் கிறது.


கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் இர.சிவசாமி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஊரப்பாக்கம் சீனிவாசன், தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் தே.சுரேஷ், தாம்பரம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கெ.விஜயகுமார், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், கும்மிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் சக்கர வர்த்தி, திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழ்மாறன் (எ) சதீசு, சோழிங்கநல்லூர் மாவட்ட இளை ஞரணித் தலைவர் நித்தியானந்தம், தென் சென்னை மாவட்டச் செயலாளர் மணிதுரை, தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவசீலன், ஆவடி நகர இளை ஞரணித் தலைவர் இ.தமிழ்மணி, பொன்னேரி நகர இளை ஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், பூவிருந்தவல்லி இளை ஞரணி அமைப்பாளர் வெங்கடேசன், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், அமைந்தகரைப் பகுதி அமைப்பாளர் சாம்குமார், அண்ணா நகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ், காரல் மார்க்ஸ், தாம்பரம் நகர திராவிடர் கழகச் செயலாளர் மோகன், குள்ளப்பன், பொய்யாமொழி, விழுப்புரம் மண்டலச் செய லாளர் குழ.செல்வராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment