சுயமரியாதை சுடரொளி செய்யாறு டி.பி.திருச்சிற்றம்பலம் இல்ல மணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 29, 2020

சுயமரியாதை சுடரொளி செய்யாறு டி.பி.திருச்சிற்றம்பலம் இல்ல மணவிழா

சமூக சிந்தனையோடு தொடர்ந்து தொண்டாற்றுங்கள்: தமிழர் தலைவர் வாழ்த்து


செய்யாறு, மே 29- செய்யாறு படிகலிங்கம் குழும நிறுவனரும், பெரியார் பெருந்தொண்டரும், முன்னாள் மாவட்ட வணிகர் சங்கத் தலைவருமான நினைவில் வாழும் டி.பி.திருச்சிற்றம்பலம் இல்ல மணவிழா செய்யாறு தாயார் அப்பாய் திருமண மண்டபத்தில் 27.5.2020 அன்று காலை 10 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


செய்யாறு நகர திராவிடர் கழக தலைவர் பொறி யாளர் தி.காமராசன்-டாக்டர் சாந்தி ஆகியோரின் மகன் டாக்டர் கே.கவுதம்ராஜ், அசனமாப்பேட்டை எம்.பொன்னம்பலம்-கலைவாணி ஆகியோரின் மகள் டாக்டர் பொன்.கார்த்திகா மணவிழா - தனி நபர் இடைவெளியுடன் நடைபெற்றது.


குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் சிறப்பு செய்து ரொட்டேரியன் டி.மணி வரவேற்புரை ஆற்றினார்.


திராவிடர் கழக கொள்கை


வேலூர் மண்டல திராவிடர் கழக தலைவர் வி.சடகோபன் முன்னிலை வகித்து பேசுகையில், திராவிடர் கழக கொள்கையை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நிலையை அடைவார்கள் என்பதற்கு திருச்சிற்றம்பலம் குடும்பம் நல்ல எடுத்துக்காட்டு என்றும், கரோனா காலத்திலும் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றி வரும் பணிகளையும் எடுத்துக் கூறினார்.


இசைபட வாழ்தல்


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலை வர் த.வெள்ளையன் தலைமை வகித்து பேசுகையில், ஈதல், இசைபட வாழ்தல் என்பதை வாழ்வில் கடைப்பிடித்து சமுதாயத்திற்கு உதவி செய்து வாழ வேண்டும் என வாழ்த்தி மணமக்களுக்கு திருக்குறள் புத்தகத்தினை வழங்கினார்.


சுயமரியாதை திருமணம்


செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் பேசுகையில், "தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதை திருமணத்தை நடத்திக் கொண்ட மணமக்கள் இருவரும் ஏழை மக்களுக்கு தொண்டு செய்வதே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார். மற்றும் குடியாத்தம் சத்தியமூர்த்தி, தமிழ் நாடு வணிகர் சங்க பொறுப்பாளர்கள் மணிவண்ணன், திருஞானம் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.


மணமகனின் தாத்தா நெய்வேலி பி.பாடகலிங்கம் மணவிழா உறுதிமொழியினை கூறி திருமணத்தை நடத்தி வைத்தார்.


தமிழர் தலைவர் வாழ்த்து


மணவிழா மேடையில் அகன்ற திரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் மணமக்களை வாழ்த்தி பேசுகையில்,


இங்கே குழுமியிருக்கக்கூடிய அனைத்து பெரி யோர்களுக்கும், குடும்பத்து உறுப்பினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் எங்கள் வணக்கம். செய்யாறு அருமைத் தோழர் காமராஜ் அவர்களுடைய துணை வியார் டாக்டர் சாந்தி ஆகியோர்களது மகன் டாக் டர் கவுதமராஜ் அவர்களுக்கும், அதேபோல அசன மாப்பேட்டை பொன்னம்பலம்-கலைவாணி ஆகி யோர்களுடைய மகள் டாக்டர் பொன்.கார்த்திகா அவர்களுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெறுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடை கிறோம்.  செய்யாறில் படிகலிங்கம் ஸ்டோர்ஸ் என்று பிரபலமாக அறிமுகமாகி பெரிய அளவிற்கு வணி கத்தை நடத்திய பெரியார் பெருந்தொண்டர் திருச் சிற்றம்பலம் அவர்களாவார்கள்.


முதுபெரும் பெரியார் தொண்டர்களான வேல், சோமசுந்தரம்,  அவர்களானாலும், அருணாச்சலம் அவர்களானாலும் மூவேந்தர்களைப் போல இணைந்து கழகப் பணி ஆற்றியவர்களாவர். அந்த வகையில் இயக்க வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள். அவர்களோடு பணி முடியவில்லை. அந்த பெரியார் கொள்கையை அவர்களுக்கும் பிறகும் அவர்களுடைய பிள்ளைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். கொள்கை குடும்பம் என்பது வழி வழியாக விழுதுகள் வழியாக பெருகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் தோழர் காமராஜ் அவர்களுடைய இயக்கத் தொண்டு. அந்த வகையில் அவர்களுடைய இல்லத்து மணவிழாவில் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட, இப்படி காணொலி மூலமாக உங்களை சந்திப்பதிலே மிகுந்த மகிழ்ச் சியடைகிறோம். ஒரு காலத்தில் இதுபோன்ற சுயமரி யாதை திருமணங்கள் நடத்த முடியாத சூழல் இருந் தது.


பெரியார் உலக மயம் ஆகி இருக்கிறார்


ஆனால் இன்றைக்கு எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு, சமதாயத்திலும் ஏற்று, சட்டத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற பெருமை பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்படுத்தப்பட்டு இன்றைக்கு நிலைநாட் டப்பட்டிருக்கிறது. சுயமரியாதை திருமணங்கள் உலக நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பது பெரியார் உலக மயம் ஆகி இருக்கிறார் என்பதற்கு அடையாளமாகும். அந்த வகையில் மணமக்கள் இருவரும் மருத்துவாகள். நல்ல வாய்ப்பாக நீட் தேர்வுக்கு முன்னாலேயே அவர்கள் மருத்துவ கல்லூரிக்கு உள்ளே நுழைந்தவர்கள். அதன் காரணமாக நம்முடைய பிள்ளைகள் டாக்டர் களாக வரக்கூடிய வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள்.


தன் முனைப்பு இல்லாமல் வாழுங்கள்


அந்த வகையில் மணமக்களாக இருக்கக்கூடிய இருவருமே டாக்டர்கள். விவரம் தெரிந்தவர்கள். அவர்களுக்கு அறிவுரை எதுவும் தேவையில்லை. நீங்கள் இருவரும் வாழ்க்கையில் எளிமையாக வாழுங்கள், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தன் முனைப்பு இல்லாமல் வாழுங்கள். தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள் மனிதன் தனக்காகவும் பிறக்கவில்லை, தானாகவும் பிறக்க வில்லை. ஆகவே சமுதாயத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். அதுபோல இல்லறத்தை தொடங்குகிற நீங்கள் தொண்டறத்தையும் தொடங்குகள் அதுதான் முக்கியமானது. அதுவும் சமுதாயத்தில் மருத்துவ ருடைய தேவை இந்த கால கட்டத்தில் அதிகமானது.


சமூக சிந்தனையோடு தொண்டாற்றுவேண்டும்


எனவே மணமக்கள் சமூக சிந்தனையோடு தொடர்ந்து தொண்டாற்றுங்கள். உங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த சமுதாயம் பயன்படக் கூடிய அளவுக்கு எல்லையற்று உங்களுடைய தொண்டறம் விரியட்டும். இந்த வகையில் இவ்வளவு சிறப்பாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய உங்களுடைய பெற்றோர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க மணமக்கள். வாழ்க தந்தை பெரியார். வளர்க சுயமரியாதை தத்துவங்கள். நன்றி வணக்கம்.


இவ்வாறு தமிழர் தலைவர் காணொலி மூலம் பேசியதை அனைவரும் அமைதியாக கேட்டு மகிழ்ந்தனர்.


நிகழ்வில் செய்யாறு மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.இளங்கோவன், பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன், இளைஞரணி தலைவர் டி.சீனிவாசன், மாணவர் கழக வெ.இளஞ்செழியன், எல்.அய்.சி. முகவர் க.பாண்டியன், மோகனா மணி, பல் மருத்துவர் ரமேஷ், டாக்டர் மகேஷ்வரி, இலக் கியா, தமிழினியன், பொன்.கிள்ளிவளவன், பொன். ராம்குமார், பொன்.யுவராஜ், ஜோதி நிர்மல் குமார், ஜெயலட்சுமி நிர்மல்குமார், டி.கே.கன்னியப்பன், தமிழ்செல்வன், தி.இந்துமதி, பா.அமராவதி, டாக்டர் பா.இசக்கியம்மாள், பி.சம்பத், ஆர்.பாரதி மற்றும் உறவினர்கள், டாக்டர்கள், வியாபாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிவாரணப் பொருள்கள் வழங்கல்


முன்னதாக, 150 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் படிகலிங்கம் நிறுவனங்கள் சார்பாக ஏழை எளிய மக் களுக்கு நிவாரணப் பொருள்களாக வழங்கப்பட்டது.


ஆற்காடு மகாத்மா காந்தி நினைவு முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.


ஞீஷீஷீனீ ஆப் காணாலி மூலம் மணவிழா நிகழ்ச்சி களை காண டாக்டர் எம்.ஆர்.முகிலன் ஏற்பாடு செய்திருந்தார்.


பெரியார் சிந்தனைகளோடு மணவிழா நிகழ்வு களை முனைவர் மு.தமிழ்மொழி தொகுத்து வழங் கினார்.


முடிவில் தி.காமராசன் நன்றி கூறினார். அனை வருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment