எது உண்மை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

எது உண்மை

 டிரம்ப் சொல்வதா?   மோடி சொல்வதா?


தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பொய் சொல்வது அவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமானது ஆகும். அரசியல் லாபத்திற் காக உண்மையை மறைத்துப் பேசுவது தற்போது ஒரு தவிர்க்கமுடியாத கடமைகளுள் ஒன்றாக அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் நினைத்துக்கொண்டு விட்டனர்.


டொனால்ட் டிரம்ப் 29.5.2020 அன்று காலை (அமெரிக்க நேரப்படி மாலை)  ஊடக வியலாளர் களிடம் பேசும்போது மோடியிடம் நான் நேரில் தொடர்புகொண்டு பேசினேன் - அவர் சீன விவகாரம் தொடர்பாக மிகவும் அதிர்ச்சியோடு காணப்பட்டார் என்று கூறினார்.


ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 4 ஆம் தேதியிலிருந்து (ஹைட்ராக்கிஸிகுளோரோ குயின் மாத் திரை தொடர்பாக பேசிய பிறகு) இதுவரை அமெரிக்க அதிபருடன் மோடி பேசவில்லை என்று செய்திவெளியிட்டுள்ளது - அதாவது அமெரிக்க அதிபர் பச்சைப் பொய் சொல்கிறார்.


இதேபோல் 2019 ஆம் ஆண்டு இந்தியா வில் மோடி அறிவித்துள்ள மக்கள் நலத் திட் டங் கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டினார் என்று பாஜகவினர் சமூக வலைதளத்தில் எழுதியிருந்தனர். இது பிரத மரின் டுவிட்டரிலும் காணப் பட்டது. உடனே அமெரிக்க அதிபர் மாளிகை,  அமெரிக்க அதிபர் இந்திய பிரதமருடன் இவ்வாறு பேசவே இல்லை என்று  கூறியிருந்தது.


ஆனால், இந்த இருவரும் தங்கள் வெளியிட்டுள்ள உண்மைக்குப் புறம்பான கருத்துகள் குறித்து இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment