ஒற்றைப் பத்தி - தி.மு.க. என்றால்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

ஒற்றைப் பத்தி - தி.மு.க. என்றால்...


பார்ப்பனர்கள் தி.மு.க.மீது குறிப்பாக தளபதி மு.க.ஸ்டாலின் மீது பாய்ந்துப் பிராண்டுவதில் முக்கிய குறியாகக் கூர்தீட்டிக் கொண்டு அலைகிறார்கள்.


பார்ப்பன ஏடுகள் ‘பத்தியம்' இருந்துகொண்டு பாய்ந்து குதறு கின்றன. ‘துக்ளக்' இதழைக் கைப்பற்றிக் கொண்ட திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாளே ‘திரு வாளர் ஸ்டாலின் அவர்களே, வீர மணியிடமிருந்து விலகி இருங்கள்' என்று எழுதிப் பார்த்தார்.


‘எங்கள் பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடல்தான்!' என்று பிசிறின்றி தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சொன் னாலும் சொன்னார் - பார்ப்பனர் கள் பதறிப் போய்விட்டனர், ஆத் திர அனலைக் கொட்டுகின்றனர்.


அவர்கள் ஒன்றை உணர வேண்டும் - இது பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்தான். அதில் சந்தேகம் இல்லை - சந்தேகம் இருந்தால் தி.மு.க.வின் நிறுவனர் அறிஞர் அண்ணா சொல்வதைக் கேளுங்கள்.


அண்ணா செதுக்கிய கல்வெட்டு



  1. தங்களுக்கும் பார்ப்பனர் களுக்கும் ஆச்சார அனுஷ்டானங் களில் எவ்வித வித்தியாசமு மில்லை என்றும், தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக்கொண்டு இருப்பவர்களுக் கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப் பாற்ற முயலுகின்றவர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ அல்லது தான் பார்ப் பனரல்லாதார் என்கின்ற முறை யில் ஏதாவது உரிமையோ, அரு கதையோ உண்டா?


2 பார்ப்பனரல்லாதார் இயக் கம் என்பது பார்ப்பனியத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப் பனர்களை நீக்கிய இயக்கமா?



  1. பார்ப்பனரல்லாதார் இயக் கம் என்றால் பார்ப்பனர்களிடம் உள்ள உத்தியோகத்தையும், பதவி யையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தா? அல்லது பார்ப் பனியத்தை ஒழிக்க வேண்டு மென்ற கருத்தா?

  2. பார்ப்பனியத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப் பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனியமானது பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக் கத்தை ஏற்படுத்திக்கொண்டும் இருக்காதா?

  3. பணக்கார ஆதிக்கம் கூடாது என்று கருதி, நாம் எவ் வளவுதான் எல்லோருடைய சொத்துகளையும் பறித்து எல்லா மக்களுக்கும் சரிசமமாய்ப் பங் கிட்டுக் கொடுத்தாலும், மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற் பாடும், மதியிலாது பொருளை மக்கள் இழக்கும் முறைகளை ஒழிக்கும் ஏற்பாடும் செய்யாவிட் டால், எப்படிப் பணக்கார ஆதிக் கம் மறுபடியும் உண்டாகிவிடுமோ அதுபோலவே, பார்ப்பனரிடமிருக் கும் உத்தியோகத்தையும், பதவி யையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும். சரி சமமாய்ப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, பார்ப்பனியத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரத்தில் வளர்ந்துவிடுமல் லவா?


(‘‘திராவிட நாடு'', 22.4.1945,


பக்கம் 9)


 - மயிலாடன்


No comments:

Post a Comment