ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 24, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • தெலுங்கானா மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அம்மாநிலத்தில் இது சமூகத் தொற்றாக மாறி உள்ளதைக் காட்டுகிறது.

  • தமிழ் நாட்டில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக உள்ள சொத்துக்களை ஏலம் விடுவதற்கு, ஆந்திர மாநில பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • குறு, சிறு நிறுவனங்கள் சரிவிலிருந்து மீள வட்டி தள்ளுபடியும், மானியமும் அவசியம் என அத்துறையின் வல்லுனர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • மோடி அரசு அனைத்து அதிகாரங்களையும் ஒரு தலைவரிடம் ஏற்கெனவே தந்துவிட்டது. மேலும் அதி காரக்குவிப்பை தொடர்கிறது. தற்போது நாடாளுமன்றம் இல்லை; மாற்றுக் கருத்து கூறிட எந்த வழியும் இல்லை என்பதை நினைவில் வையுங்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆழ வேரூன்றியுள்ளனர் என ’புதிய மயான உலகத்திற்கு தயாராகிவிட்டாமா?’ என்ற தலைப்பில் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.



தினமணி, சென்னை பதிப்பு:



  • பொதுமுடக்கம் காரணமாக வருமானமின்றி விபத்தில் காயமடைந்த தனது தந்தையை அரியானாவில் இருந்து பீகாரில் உள்ள தனது சொந்த ஊருக்கு மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு 1200 கி.மீ. தூரத்தை 8 நாட்களில் கடந்து வந்த பெண் பற்றிய செய்தியை ஊடகம் மூலம் தெரிந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்-பின் மகள் இவாங்கா டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • தமிழ் நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் 11 பெரு நகரங்களில் 70 விழுக்காடு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதார வசதிகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • மோடி ஆட்சியின் ஒரு ஆண்டு அடுத்த வாரம் நிறைவுறுகிறது. இதில் கொண்டாடுவதற்கு ஒன்றும் இல்லை. மோடியின் ஆட்சி அதிகாரத்தில் மோசமான ஆண்டு இது எனக் கூறலாம் என எழுத்தாளர் தவ்லீன் சிங் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


- குடந்தை கருணா,


24.5.2020


No comments:

Post a Comment