ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • 25.5.2020 அன்று இந்தியாவில் விமானச் சேவை துவங்கிய நிலை யில், சில மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக, 630 விமானங்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆவலுடன் விமான நிலையம் வந்த நூற்றுக்கணக்கான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

  • பிப்ரவரி 22-ஆம் தேதி டில்லியில் குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தேவங்கானா கலீதா, நடாசா நர்வால் என்ற இரு பெண்களும் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிணை தரப்பட்டு வெளியே வந்ததும் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது, அரசின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. இதே அணுகுமுறை, பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் மதவிரோதப் பேச்சுக்கு அரசின் மவுனம் குறித்தும் தலையங்க செய்தி எடுத்துக் காட்டுகிறது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத மசோதா திருத்தத்திற்கு, உலக தொழிலாளர் அமைப்பு, பிரதமர் மோடிக்கு தனது கவலையை தெரிவித்துள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • சென்னையில் மாருதி சுசுகி நிறுவனத்தைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொழிற்சாலை தொடர்ந்து இயங்குமா? என்ற அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:



  • கரோனா தொற்று சிக்கலில் இருந்து மீள, கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மாநிலங்களோடு மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும் பேராசிரியர்கள் சஞ்சய் குமார், சந்திரசூர் சிங் தங்களது கட்டுரையில் தெரிவித்துள்ளார்கள்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • கரோனா தொற்று குறித்த பயத்தை மக்களிடம் அரசு ஏற்படுத்தி உள்ளது. விஞ்ஞான மனப்பான்மையையும் கல்வியறிவையும் அரசு சரியாக மேற்கொள்ளததால், விழிப்புடன் இருக்க வேண்டிய மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள் என்கிறார் எய்ம்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஷா ஆலம் கான்.

  • வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் விருப்பத்தின் காரணமாக இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவிலேயே, தங்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, இடம் பெயர கட்டாயச் சூழ லில் செல்லும் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியினரின் புலம் பெயர்ந்த வாழ்க்கை வேறானது என்கிறார் அய்தராபாத் பல்கலைக்கழகப் பேராசிரியர் சவுமியா தெச்சம்மா.

  • விசுவ ஹிந்து பரிசத்தின் தலைவராக இருந்து விரட்டப்பட்ட பிரவீன் தொகாடியா துவங்கிய புதிய அமைப்பான ராஷ்டிரிய பஜ்ரங்தள் அமைப்பின் கேரளப் பிரிவுக் கூட்டம், திருவனந்தபுரத்தில் சினிமா படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட சர்ச் கொட்டகையை, கோயில் இடத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறி, அதனை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.

  • பீகாரில் வரும் சட்டமன்றத் தேர்தலில், புலம் பெயர் தொழிலாளர் கள் பிரச்சினை முதன்மையாக இருக்கும் என ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாகா கூறி உள்ளார்.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்பிச் செல்வதால், இந்தியப் பொருளாதாரம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலைமைக்கு சென்றுள்ளது. அவர்களுக்குரிய வேலை வாய்ப்பை உருவாக்க அரசு தவறிவிட்டது என்கிறார் ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்தோஷ் மெக்ரோத்ரா.


கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் மெத்த னத்தை எதிர்த்தும், தன்னிச்சையான மக்கள் விரோதக் கொள்கை முடிவை எதிர்த்தும் போராட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


- குடந்தை கருணா,


26.5.2020


No comments:

Post a Comment