தன்மானப் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

தன்மானப் பெரியார்!

வாய்மூடிக் கிடக்கிறதே உலகு


        வழியிலையே பசியோடு பழகு!


நோய்த்தொற்றுப் பரவியதே யின்று


        நுழையாத இடமிலையே நம்பு!


வாய்ப்பந்தல் போட்டபெருங் கோயில்


        வழிமூடி காத்திருக்கு நோயில்!


காய்ந்தே கிடக்கிதின்று சிலையே


        காத்திட மூடமத மிலையே!


 


பெரியாரும் சொன்னார் அன்று


        பேயில்லை பெரிதோ கடவுள்


அரிதாக அறிதலும் ஆண்மை


        அறிந்திட அறிவுலகம் மேன்மை


தரிகெட்ட பார்ப்பானின் தருக்கம்


        தான்கொள்ள தரணியில் துக்கம்


நரிபோல நாளுமே யாகம்


        நாமன்றோ ஏமாளி போகம்!


 


தன்மானம் கொள்கையைத் தந்தார்


        தனியுடைமை கொடுமைதனைக் கடிந்தார்!


என்னயிலை இன்னாட்டி லென்றே


        எழுத்துடன் இன்கல்வி தந்தார்


கண்ணிவெடி கருஞ்சட்டைக் கண்டார்


        கனவிலும் கடவுளிலை யென்றார்


சின்னமோ சிறுகோடு நாமம்


        சிறுமதி அடிமைக்குணம் வேண்டா!


 


சமுதாய முன்னேற்றம் ஒன்றே


        சாதனைப் பெரியாரின் தொண்டே


குமரிமுதல் வடவேங்கை மலையும்


        கொள்வோமே திராவிட மென்றார்


சமநீதிக் கொள்கைபெரு வீரர்


        சாதனையும் ஜாதியிலை தீரர்


இமிழ்கடலும் எங்களுயிர் தமிழும்


        பெரியாரின் பெயர்ச்சொல்லி யாளும்!


- பாவலர் சீனி பழனி, சென்னை


No comments:

Post a Comment