இந்து சமய குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விதிமுறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

இந்து சமய குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விதிமுறைகள்

“இந்து மத தத்துவமும் மனு தர்மமும்” என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஜாதிப்பெயர்களை வைத்தது எப்படி என்பதை ஆய்வு செய்து மிக தெளிவாக குறிப்பிடுகிறார்.


இந்துக்களின் பெயர்கள் நான்கு வகைகளாக அமைகின்றன. அவை



  1. குல தேவதை சம்பந்தப்பட்டதாகவோ

  2. குழந்தை பிறந்த மாதத்தை சம்பந்தப்பட்டதாகவோ

  3. குழந்தை பிறந்த நேரம் தொடர்பானதாகவோ


4.முற்றிலும் தொழில் சார்ந்தவையாகவோ அமை கின்றன.


இந்த நான்காம் வகை பெயர் மனுவின் கூற்றுபடி இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். அந்த பகுதிகள் இரண்டும் எப்படி அமையவேண்டும் என்பதற்கான நெறிமுறைகளையும் மனுகூறுக்கிறார்.


இந்த இரண்டாம் பகுதி பெயர் பார்ப்பனனுக்கு மகிழ்ச்சியைக் குறிப்பதாகவும், சத்ரியனுக்குப் பாது காவலை குறிப்பதாகவும், வைசியனுக்குச் செழிப்பைக் குறிப்பதாகவும், சூத்திரனுக்குத் தொண்டூழியம் செய் வதை குறிப்பதாகவும் அமையவேண்டும். எனவே, இதன்படி பார்ப்பனன் பெயரில் சர்மா (மகிழ்ச்சி)தேவ என்ற பின்பகுதியும், சத்திரியர் பெயரில் ராஜா (அதி காரம்), வர்மா (வீரம்) என்ற பின்பகுதியும், வைசியர் பெயரில் குப்தா (கொடை), தத்தா (கொடையாளி) என்ற பின்பகுதியும், சூத்திரர்கள் பெயரில் தாசர் (ஊழியர்) என்ற பின்பகுதியும் அமையும், மனுவின் கூற்றுப்படி பெயரின் முற்பகுதி பார்ப்பானுக்கு மங்கலத்தையும், சத்ரியனுக்கு அதிகாரத்தையும், வைசியனுக்கு செல்வத் தையும், சூத்திரனுக்கோ வெறுப்பு தரும் ஒரு சொல் லையும் குறிக்க வேண்டும்.


சூத்திரனுக்கு நல்ல பெயர் வைப்பதை மனுவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை (அதனால்தான் அமாவாசை, பாவாடை, மண்ணாங்கட்டி, மொட்டை, கருப்பு என்றெல்லாம் பெயர் வைத்து கேவலப்படுத் தினார்கள்). வாழ்விலும் பெயரிலும் வெறுக்கத்தக்க நிலையிலேதான் சூத்திரன் இருக்கவேண்டும். எனவே இந்து மதம் பெயரிலும் சமூக சமத்துவத்தை ஏற்க மறுக்கிறது,


மனித ஆளுமையையே கீழ்மைப்படுத்துகிறது என்பது தெளிவு.


இதை தான் தந்தை பெரியார் அவர்களும் திராவிட இயக்க சமுதாய தலைவர்களும் தொடர்ந்து போராடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு கல்வி வழங்கி, நல்ல தமிழ் பெயர் வைத்து வழக்குரைஞர்களாக, பேராசிரியர்களாக, மருத்துவர்களாக பணியமர்த்தினார்கள். மானத்தையும், அறிவையும் ஊட்டினார்கள். தந்தை பெரியார் என்ற சூரியப் புள்ளியிலிருந்து உருவானமுதல்வர்களும் தலைவர்களும் உழைத்த உழைப்பால் நமது நாட்டின் சூத்திர மக்களுக்கு மிகப்பெரிய ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஆனால் தற்போது படிப்பறிவு பெற்ற சிலர் தங்களது நிலையை  மனுதர்மத்தில் எந்த இடத்தில் வைத்துள்ளார் கள் என்பதை மறந்து மானமிழந்து, மதியிழந்து மீண்டும்  புரியாத வெட்கி நாணும்படியான  பெயர்களை வைத்துக்கொள்ள பெருமைப்படுகிறார்களே!  சிந்திக்க வேண்டாமா?


- குடந்தை.க.குருசாமி,


தஞ்சை மண்டல செயலாளர்,


திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment