அகவை 86 காணும்
அறிவாயுதத்தை
அனைவரிடத்திலும் கொண்டு
சேர்ப்போம்!
ஆரியம் விதைத்திட்ட அடிமை
வாழ்வினை
அடியோடு வீழ்த்திட
அறிவுலக ஆசான் அடையாளம்
காட்டிய போர்வாள் !
தமிழினத்தின் தலையெழுத்தை
மாற்றிக் காட்ட தமிழர் தலைவர் தம்
கரம் சேர்ந்த அறிவாயுதம்!
மின்மினிகளாய் நாளேடுகள் பல
இருக்க உண்மை வரலாற்றினை
உலகிற்கு உரக்கச் சொல்லும் கருத்துக்
களஞ்சியம்!
தமிழினத்தின் விடுதலையாய்!
தமிழன் வீட்டு அடையாளமாய்
திகழும் விடுதலை நாளிதழை
உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும்
உன்னத பொறுப்பை
விடுதலை வாசகர் விளைச்சல்
பெருவிழா என்ற அறிவுப் பணியை
சிரம் ஏற்று வாசகர் சங்கிலித்
தொடரை உருவாக்குவதுடன்
உடற்பிணி மட்டுமல்ல
சமூகப் பிணியகற்றும்
தந்தை பெரியார் தம் இலட்சியப்
பணி முடிப்போம்!
சமத்துவ சமுதாயம் படைப்போம் !
அகவை 86 காணும் விடுதலை
நாளிதழை
அனைவரிடத்திலும் கொண்டு
சேர்ப்போம்!
- திராவிடர் மாணவர் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி - 21.
No comments:
Post a Comment