வணக்கம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 22.5.2020 அறிக்கையில் அறிவுறுத்தியபடி விடுதலை வாசகர்களை அதிகப் படுத்தும் செயல்பாட்டில் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வழிகாட்டுதலின்படி விடுதலை மின்னிதழ் என்ற குழுவை உருவாக்கி மாவட்டக் கழகத் தோழர்களிடம் இதைப் பற்றி விளக்கி ஒவ்வொரு தோழரும் குழுவை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக கீழ்கண்ட தோழர்கள் இல.திருப்பதி 253, விடுதலை ஆதவன் 200, கா.நல்லதம்பி 175, பூ.சிவக்குமார் 180, இரா.பாண்டிமுருகன் 176, இரா.கோவிந்தன் 200, ச.சுந்தரமூர்த்தி உள்ட்ட தோழர்க குழுவை உருவாக்கி விடுதலை மின்னிதழை அனுப்பத் தொடங்கிவிட்டனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உயிர் மூச்சான விடுதலை யைப் பரப்புவதில் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. விடுதலை சென்றடைந்த சிறிது நேரத்திலேயே நண்பர்கள் பலரும் நன்றியைப் பகிரத் தொடங்கிவிட்டனர்.
ஊரடங்கு காலத்திலும் தமிழர்களின் இனமான நலன் காக்க கண்துஞ்சாது உழைத்துவரும் ஆசிரியர் அவர்களுக்கும், விடு தலைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
- இல.திருப்பதி, விருதுநகர்
No comments:
Post a Comment