ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • கொரோனா தொற்றின் முதல் அலை இன்னமும் முடியவில்லை. இரண்டாவது அலை விரைவில் எழும் என உலக சுகாதார அமைப் பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக் ராயன் எச்சரித்துள்ளார். பொருளாதார மீள்வு, நாடுகளிடையே பயணம் போன்றவை குறித்த நம்பிக்கையை குறைக்கிறது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • மகாராட்டிர அரசைக் கவிழ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாஜக, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் வரும் என செய்தி பரப்பப்படுவதையடுத்து, ஆளும் கட்சித் தலைவர்கள் சந்திப்பு.

  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்து விளக்கம் கேட்டும் உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • தமிழ் நாட்டில் பள்ளிகள் ஆகஸ்டு மாதத்திற்குமுன் திறந்திட எந்த வாய்ப்பும் இல்லை. இது குறித்து கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளிகளை ஆகஸ்டு மாதம் இரண்டாவது வாரத்திலும், துவக்கப் பள்ளிகளை செப்டம்பர் மாதத்திலும் துவக் கிடலாம் என தமிழக முதல்வருக்குக் கருத்து தெரிவித்துள்ளனர்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • இந்தியப் பொருளாதாரம் 2021 நிதியாண்டில் 5% பின்னடைவை சந்திக்கும் என்றும், தற்போதைய முதல் காலாண்டில் பூஜ்யத்துக்கும் கீழே -25% என்ற அபாயகரமான நிலையை எட்டியுள்ளது என்றும் கிரிசில் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆய்வுக் குழு அறிக்கை விடுத்துள்ளது.

  • குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மாண வர்களுக்கு ஊக்கத்தொகை தரப்படாது என புதுச்சேரி பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  • மக்களுக்கான இலவச பொது விநியோகம், இலவச இணை யத்தைவிட முக்கியமானது என கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஜெயகுமார் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

  • கொரோனா தொற்று முழு அடைப்பு முழு தோல்வி. இதில் இருந்து விடுபட மத்திய அரசின் திட்டம் என்ன என்பதை பிரதமர் மோடி, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • டில்லி பல்கலைக்கழக இணையம் வழியே தேர்வு நடத்திடும் முடிவுக்கு, 85% மாணவர்களால் எதிர்ப்பு. தேர்வுக்கான பாடங்கள், வலுவிழந்த இணையதளம் இவை, தேர்வு நடத்திடும் சாத்தியக் கூறு இல்லை என மாணவர்கள் கருத்து.

  • இணையம் வழியே கல்வி கற்பிப்பது கூடுதலான செயல்பாடாக இருக்கலாம். ஆனால் பள்ளியில் கற்பிக்கும் முறைக்கு மாற்றாக இருத்தல் கூடாது. இந்தியாவில் பன்னெடுங்காலமாக கல்வி நிலை யங்கள் சமத்துவத்திற்கும், அனைத்து சமூகத்தையும் உள்ளடக்கிய தாகவும் இருக்க வேண்டிய முக்கிய பங்களிப்பை நிராகரித்துள்ளோம் என டில்லி பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சதீஸ் தேஷ் பாண்டே தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • இந்தியாவை நேருவின் சித்தாந்தத்தில் தொடர்ந்திட வேண்டும். இன்றைய மதவாதச் சக்திகளை எதிர்க்கவும், நல்லிணக்க ஒளியை ஏற்றிடவும் இது அவசியம் என நேருவின் மறைவு நாளான இன்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

  • பொதுத்துறை நிறுவனங்களில் அதிக முதலீடும், ஆராய்ச் சித்துறை வளர்ச்சி இவற்றை அரசு மேற்கொள்ளாமல், இந்தியா எவ்வாறு சுயசார்பு நிலையை அடைய முடியும்? என அகில இந்திய மக்கள் விஞ்ஞானக் குழுமத்தின் டி.ரகுநாதன் தனது கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.


எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:



  • நாடாளுமன்றத்தை ஆகஸ்டு மாத இறுதியில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மார்ச் 23-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் முடிவுற்றது. ஆறு மாதங்களுக்குள் மீண்டும் கூட்டம் நடைபெற வேண்டும்.


டைம்ஸ் ஆப் இந்தியா, புதுடில்லி பதிப்பு:



  • 18 மாநிலங்கள் தங்கள் உள் நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10% இழப்புச் சந்திக்கும் என ஸ்டேட் வங்கியின் ஆய்வு அறிக்கை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளது.


- குடந்தை கருணா,


27.5.2020


No comments:

Post a Comment