உயிரடங்கிய பயணங்களில்.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

உயிரடங்கிய பயணங்களில்..


ஊரெங்கும் கரோனா!


உலகெங்கும் கரோனா!


நாடெங்கும் கரோனா!


நகரெங்கும் கரோனா!


உயிரடங்கை தடுப்பதற்கு,


ஊரடங்கு சட்டங்கள்.


அவரவர்கள் அவரவர்கள்


வீட்டிலேயே!


அசைவற்று நின்றது நாடு.


வீடில்லாதோர் நிலை என்ன?


விவேகமற்ற மத்திய அரசு நினைக்க மறந்தது.


அடுத்தடுத்த மாநிலங்களில்


அன்றாடங்காய்ச்சிகளாய்,


ஆயிரமாயிரமாய் கூலித் தொழிலாளர்கள்..


அன்றாடங்


காய்ச்சிகளின் அடுத்தவேளை உணவு என்ன?


அறிவை மறந்த அரசாங்கத்தில் எந்த ஒரு  பதிலும் இல்லை..!


வெளியில் சென்றால் வேலை இல்லை


வீட்டில் நின்றால் சோறு இல்லை..


பசித்திருக்கும் எங்களுக்கு பசி தீர என்ன வழி?


பரிதாபமாய் கை கூப்பி வணங்கியும் தான் கேட்டார்கள்..


கேவிக் கேவி அழுதாலும் கேட்பதற்கு நாதி இல்லை..


கேளாக் காது அரசுகளிடம் கேட்டுப் பார்த்தும் பயனில்லை..


இறுகிப்போன இதயங்கள் இறுதியாக முடிவெடுத்தன..


இறப்பதற்கு முன்பாகிலும் பிறப்பிடம் போய் சேர்வோம் என..


ஊரடங்கால் வாகனங்கள் தான்


ஓட வில்லையே.


ஊர்கள் நோக்கி கால்கள் தானாய் நடக்கத் தொடங்கின.


நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போட்டு நாசமாய்ப் போனோம்..


நா வரள,கால்கடுக்க நடந்து செல்கிறோம்.


இடையினிலே குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்குமா??


இளம் பிள்ளைகள் பசியாற உணவு கிடைக்குமா?


துரத்தி வரும் கேள்விகளோடு தொடரும் பயணங்கள்.


துயரச் சுவடுகள்  பதிக்கப்பட்ட நெடுஞ்சாலைகள்..


இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, 


எங்கும் தகிக்கும் கொடிய சாலைப்பயணங்கள்.


சொல்ல முடியா சோகம் அம்மா ..


சொந்த ஊர்கள் செல்லும் முன்பே பிணங்கள் ஆன அவலம் அம்மா


உயிரடங்கு பயணங்களில் ஒருவர் கூட பூணூல் இல்லை..


ஒரு பூணூல் இருந்திருந்தால் ஊடகம் எல்லாம்


இப்படி ஊமையாக இருந்திருக்குமா?...


வரலாறு எங்கும் ரத்தக்கறைகள்


வருணாசிரமத்தின் கொடுங்கரங்கள்..


ஒடுக்கப்பட்டோர் உயிர்கள் எல்லாம்,


உயிர்க்கணக்கில் சேர்க்கப்படா கொடுமை அம்மா ..


உயிரடங்கு பயணங்களில் உயிர்நீத்த எங்கள் தோழர் ..


உதிர்த்த ரத்தம் ஒருநாள் இங்கே நீதி சொல்லும் ...


பார்ப்பனிய ஜனதா அரசு அந்நாள்,


பாடையிலே நிச்சயம் செல்லும் ...


- தகடூர் தமிழ்ச்செல்வி


மாநில மகளிரணி செயலாளர்


No comments:

Post a Comment