தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை எதிரொலி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை எதிரொலி!

தூத்துக்குடி மாவட்டம்


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் புரட்சிகர மான 'விடுதலை' பரப்பும் ஏற்பாட்டை நிறைவேற்றும் வகையில், அவர்கள் அறிவித்தபடி 22.5.2020 அன்று இரவு 2 மணிவரை விழித்திருந்து 700க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள், மதச் சார்பற்ற கொள்கையைப் பரப்பும் பணியில் ஒத்த கருத்துடைய  தி.மு.க., இடதுசாரிக் கட்சித் தோழர்கள்.  மற்றும் பிற அரசியல் கட்சித் தோழர்கள், முன்னாள். இன்னாள் மாணவச் செல்வங்கள், மருத்துவர்கள். வழக்குரைஞர்கள், தணிக்கையாளர்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்  என பல்வேறு தரப்பினருக்கும் 'விடுதலை' (ஆசிரியர் அவர்களின் அறிக்கை தாங்கிய 22.5.2020ஆம் நாளிட்ட 'விடுதலை')  ஏட்டினை 'வாட்ஸ்அப்' வழியாக தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் அனுப்பி வைத்தார். மேலும் எண்ணிக்கையை கூட்ட ஏற்பாடு செய்து வருகிறார்.


விழுப்புரம் மண்டலம்


விழுப்புரம் மண்டலத்தில்  வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் விடுதலை பரப்பும் பணி நடைபெற்று வருகிறது. கல்லக்குறிச்சி திராவிடர் கழகம் வாட்ஸ் அப் குழுவில் 55தோழர்களுக்கும், விழுப்புரம் மண்டல வாட்ஸ் அப் குழுவில் 78தோழர்களுக்கும், கல்லக்குறிச்சி பகுத்தறிவா ளர் கழகம் வாட்ஸ் அப் குழுவில் 39 தோழர்களுக்கும், கல்லக்குறிச்சி பக இலக்கிய மன்றம் வாட்ஸ் அப் குழுவில் 22 தோழர்களுக்கும் ஆக 194தோழர்களுக்கும் விடுதலை பரப்பும் பணி நடைபெற்று வருகிறது


- குழ.செல்வராசு, விழுப்புரம் மண்டல செயலாளர்.


தஞ்சாவூர் மாவட்டம்


தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். அய்யா, நான் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் தஞ்சை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றி வருகிறேன். கரோனா தொடங்கிய ஊரடங்கு காலத்தில் இருந்து விடுதலை செய்தித்தாள் நான்கு பக்கமாக வாட்ஸ்அப்பில் வந்ததில் இருந்து பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் உடனே அனுப்பி வைப்பார். அதை நான் உடனே மலேசியா, சிங்கப்பூர், கத்தார் நாட்டில் உள்ள நண்பர்களுக்கும்  தூத்துக்குடி, கோயம் புத்தூர், மதுரை, கோவில்பட்டி, பூதலூர், கீழ்வேளுர் மற்றும் தஞ்சாவூரில் இருக்கும் நண்பர்கள் உட்பட மொத்தம் 32 பேருக்கும் தொடர்ந்து அனுப்பி வருகிறேன். தற்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளின்படி மேலும் பல நண்பர்களுக்கும் சேர்த்து மொத்தம் 66 நபர்களுக்கு அனுப்பி வருகிறேன்.


ஒரு நாள் விடுதலை அனுப்புவதற்கு தாமதம் ஆகி விட்டது. "இவர்கள் நமது இயக்கவாதிகள் இல்லை" இருப்பினும் சிலர் இன்று இன்னும் ஏன் ‘விடுதலை’ செய்தித்தாள் வரவில்லை என்று கேட்டார்கள். இப்போது அவர்களால் ‘விடுதலை’ படிக்காமல் இருக்க முடிய வில்லை. தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கும், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்க ளுக்கும் நன்றி நன்றி. 


- ஏ.வி.என்.குணசேகரன், விடுதலை வாசகர் வட்டசெயலாளர், தஞ்சாவூர்


மதுரை மாவட்டம்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துன் கொள்கின்றேன். தேனியில் நடைபெற்ற காணொலி காட்சியில் கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் அவர்கள் ஒரு சிறந்த அலோசனை வழங்கினார். அதுபோலவே விடுதலை செய்திகளை அனுப்புவதற்கு வாட்ஸ்அப்-இல் இருக்கும் நியூ பிராண்ட் காஸ்ட் மூலமாக இரு குழுக்களை ஆரம் பித்துள்ளேன். நமது கழகத் தோழர்கள் 70 நபர்களையும் மற்ற கட்சி தோழர்கள் 60 நபர்களையும் இக்குழுவில் இணைத்து தனித் தனியாக விடுதலை செய்திகள் சென்று அடையுமாறு ஏற்பாடு செய்துள்ளேன்.


- த.ம.எரிமலை, மதுரை புறநகர்


மாவட்ட செயலாளர்


No comments:

Post a Comment