செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

செய்தித் துளிகள்....

* கரோனா நெருக்கடி ஒரு பக்கம் அதிகரித்துள்ள நிலையில் போலி மின்னஞ்சல் வழி தகவல்களைத் திருடுவதும் அதிகரித்து வருவதாக அய்.நா. ஆயுதக் குற்றப்பிரிவு தலைவர் எச்சரிக்கை.


* இரண்டு மாதங்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,736 எகிறி உள்ளது.


* சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரூ.5,400 கோடி ரூபாயை மூன்று வாரங்களுக்குள் செலுத்திட வேண்டும் என்று ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அம்பானிக்குப் பிரிட்டன் நீதிமன்றம் ஆணை.


* வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடர விரும்புவதாக 70 விழுக்காடுக்கும் அதிகமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


* சர்வதேச விமான சேவை ஆகஸ்ட்டில் தொடங்கப்பட உள்ளது. இது விமான போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பு.


* ஏசு அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வாட்டிகன் தேவாலயம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று திறப்பு.


* தி.மு.க. மீதான வழக்குகளை எதிர்கொள்ள மாவட்ட வாரியாக வழக்குரைஞர் குழு அமைக்கப்படுகிறது.


* மொத்தம் 4 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் இதுவரை சொந்த ஊர் திரும்பியோர் 75 லட்சம்.


* முகநூல் நிறுவனர் மார்க் ஜீக்கர் பெர்க் சொத்து மதிப்பு 3000 கோடி டாலராக உயர்வு.


* சீனாவிடமிருந்து கரோனா வைரஸ் பரவியதா? விசாரணைக்குத் தயார் என்று சீனா அறிவிப்பு.


* பெரும்பாலும் சென்னைவாசிகள் கரோனா, கொசுக் கடி, வெப்பம் எனும் மூன்று கடிகளால் துன்புறுகின்றனர்.


* சென்னையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 527.


No comments:

Post a Comment