உலகத்தின் கவனத்தை ஈர்த்த சித்தார்த்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

உலகத்தின் கவனத்தை ஈர்த்த சித்தார்த்!


தஞ்சையைச் சேர்ந்த சித்தார்த் என்கிற 1 ஆம் வகுப்பு சிறுவன் பேச் சுப் போட்டிக்குப் பெயர் கொடுத் தான். 2 ஆம் வகுப்பு மாணவர்களே சேர்க்கப்படுவார்கள் என்றதும், "சும் மாவாவது" பேசட்டும் என்றார்கள் பெற்றோர். சரியென ஒருங்கிணைப் பாளர்கள் கூறினர். ஆனால் அந்தப் பேச்சுதான் உலக அளவில் "வைரல்" என்ற நிலையை அடைந்துள்ளது. அந்தக் காணொலி பல இலட்சம் மக்களை ஒரே நாளில் சென்று சேர்ந்தது. இலால்குடி பெரியார் பெருந்தொண்டர் இ.ச. இராவணன் (தேவசகாயம்) குடும்பத்தாரின் 4ஆம் தலைமுறையும் இலால்குடி மாவட்டத் தலைவர் வால்டேர் அவர்களின் பெயரன் தான் இந்தப் பெரியார் பிஞ்சு!


சித்தார்த் பேசியது: என் பார்வையில் பெரியார். அதாவது ஒரு குழந்தையின் பார்வையில் பெரியார். செல்வச் சீமானாய் ஈரோட்டில் பிறந்து, வெண்தாடி மார்பில் விழ, கோலூன்றிய காலம் வரை அப்படி என்ன செய்து விட்டார் அந்தக் கிழவர்? என்ன செய்து விட்டார் அந்தக் கிழவர்?


பிறப்பால் நீ தாழ்ந்தவன்; என் னைத் தொடாதே  என்றார்களாமே! என் நண்பனின் தோளில் கை போட்டுக் கொண்டே கேள்விப் படுகிறேன் இதை!


அடுப்பூதும் பெண்ணே உனக் கெதற்கு படிப்பு என்று கூறு கிறார்களாமே! கூறுகிறார் என் டாக்டர் அத்தை!


வெள்ளைச் சேலை உடுத்தி, முடங்கிய பெண்களுக்கு எல்லாம், அதற்குப் பிறகும் வாழ்க்கை இருக் கிறது என்றாராமே நம் பெரியார்! நம் பெரியார்!


பக்தி என்பது தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்றாராமே நம் பெரியார்!


இத்தனை சீர்திருத்தமும் செய் வது அவ்வளவு எளிதா? அவ்வளவு எளிதா? மூடநம்பிக்கைக்கும், ஜாதிக் கும் எதிராக எவ்வளவு போராட் டங்களை, எவ்வளவு அவமானங் களைச் சந்தித்திருப்பார்?


பெண் விடுதலைக்குப் போராடி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி கடவுளை மற; மனிதனை நினை என்றவர், வைக்கம் வரை சென்று கோவிலுக்குள் அனை வரையும் வணங்க விட்டாராமே!


பிறகு புரிந்தது... என் பார்வையில் பெரியார், "சாமி கும்பிடுபவர்களுக்கு எதி ரானவர் இல்லை; கும்பிடுறேன் சாமி என்பவர்களுக்கே எதிரானவர்.


நன்றி! வணக்கம்!


 


No comments:

Post a Comment